மனிதனும் நோய்களும்...

        உலகில் மக்கள் அதிகமாக மடிந்து வீழ்ந்தது வெடிகுண்டாலோ, யுத்தத்தாலோ, புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களாலோ அல்ல. கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக ஆண், பெண், குழந்தை என்று வித்தியாசமே பார்க்காமல் லட்சக்கணக்கான மக்களை மாய்த்த கொடூரமான வில்லனாக நோய்கள்தான் இருந்தன.
           அந்த காலத்தில் பெரியம்மை, போலியோ, வயிற்றுப்போக்கு என்று விதவிதமான நோய்கள் ஒவ்வொன்றும் அவதாரம் எடுக்கும் போது உலகில் மடிந்தவர்களின் பிரேதங்களை புதைப்பதா, எரிப்பதா? என்று முடிவு எடுக்க முடியாத அளவுக்கு உடல்கள் மலை போல் குவிந்து விடும்.
            மருத்துவம் அடியெடுத்து வைக்காத ஆரம்ப காலம் அது. தென்அமெரிக்கா, கற்காலத்தை கடந்து கொண்டு இருந்த காலம். அதாவது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று யார்படுத்தாலும் அவர்களை பேய்பிடித்து இருப்பதாக  சமூகம் கருதியது. மண்டை ஓட்டை உடைத்து துவாரம் போட்டால் மண்டைக்குள் இருந்து பேய் வெளியேறி விடும் என்று நம்பினார்கள். இந்த நம்பிக்கையால் நோய் பாதித்தவரின் வந்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு கூர்மையான ஆயுதத்தால் ஓங்கி ஓங்கி அடித்து ஓட்டை போடுவார்கள்.
            சிகிச்சை எடுக்க வந்தவரோ துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்து போவார். நோய்க்கான சிகிச்சை என்பது உலகம் முழுவதும் இதேபோல்தான் அன்றைக்கு இருந்தது. பிற்காலத்தில் நாஜி படையினரிடம் யூதர்கள் பட்ட கஷ்டத்தை விட பல மடங்கு வலியை நோயாளிகள், மருத்துவர்கள் என்று வேஷம் போட்டுக் கொண்டு இருந்த பூசாரியிடம் மக்கள் அனுபவித்தார்கள்.

             இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 400 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாட்டில் தோன்றிய ஹிப்போகுரோட்டஸ் என்பவர்தான் விஞ்ஞான முறைப்படி மருத்துவத்தை அணுகிய முதல் மனிதர். நோய்கள் வருவதற்கு பேய், பிசாசுகள் காரணம் இல்லை என்று முதலில் சொன்னவரும் அவர் தான்.
            இறந்து போனவர்களின் உடலை ஆராய்ச்சிக்காக திறந்து பார்ப்பது குற்றம் என்று அன்றைய மதகுருமார்கள் கடுமையாக எச்சரித்து இருந்தார்கள். மனித உடலின் செயல்பாடு அந்த காலத்தில் மர்மமாக இருந்தது. ஹிப்போகுரோட்டஸை அடுத்து துருக்கி நாட்டை சேர்ந்த ஹேலன் என்ற மருத்துவர் வந்தார். மனித உடலில் உள்ள ரத்தம், சளி, பித்தநீர், கருப்பு பித்தநீர் என்று நான்கு வகையான திரவங்கள் இருக்கின்றன. இதில் எந்த ஒரு திரவத்தின் அளவு குறைந்தாலும் அல்லது அதிகமானாலும் அது நோய் தான் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கிரேக்கர்கள் நம்பிக் கொண்டு இருந்தார்கள். அந்த கருத்து உண்மை தான் என்று ஹேலன் சொன்னார். ஹேலன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த மனித இனம் அதை உண்மை என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பியது.
16-ம் நூற்றாண்டில் மதங்களின் செல்வாக்கு சரிந்தது. அப்போது தான் மனித உடலை வைத்து ஆராய்ச்சி செய்ய உலகுக்கு வாய்ப்பு கிடைத்-தது. இதனையடுத்து இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் பற்றி உலகுக்கு இருந்த தவறான கருத்து 1628 -ம் ஆண்டு வில்லியம் ஹார்வி என்ற ஆங்கிலேய விஞ்ஞானியால் தகர்க்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இதயம் என்ற ஒன்று பிறப்பில் இரந்து இறப்பு வரை இடைவிடாமல் துடித்துக்கொண்டு இருக்கிறது என்று உலகம் முதன்முதலில் உணர்ந்த சமயம் அது. அதன்பின் மருத்துவத்துறை படிப்படியாக முன்னேறி இன்று செயற்கையாக செல்லை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.

0 comments:

கருத்துரையிடுக