குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக வேண்டுமா?



நாம் வாழும் வீடு, நம்முடைய முன்னேற்றத்திற்கு பயன்படும் விதம் அமைப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் குழந்தைகளின் படிப்பிற்கும் வாஸ்து சாஸ்திரத்தில் நல்ல அமைப்புடன் குழந்தைகள் படிக்கும் அறையை அமைப்பதற்கு வழி கூறுகிறது.
வீட்டின் ஒவ்வொரு அறையையும் வாஸ்து சிறப்புடன் அமைக்கும் நாம், குழந்தைகளுக்கு அவசியமான உடல் வளர்ச்சியும், ஆரோக்கியமும், சுறுசுறுப்பும், நல்ல படிப்பு திறமையும் நன்கு வளம் பெற வாஸ்து சாஸ்திரத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
                 குழந்தைகள் படிக்கும் அறைக்கு என வாஸ்து சாஸ்திரமும் சில விதிகள் வகுத்துள்ளது.
வடக்கு திசை இயற்கை சக்திகளையும், வடதுருவ காந்த சக்தியையும், வீட்டினுள் பரவ வழி செய்கிறது. கிழக்கு திசை சூரியனில் இருந்து வெளிப்படும் நல்ல சக்திகளை கிரகித்து மூலையை சுறுசுறுப்பாக்குகிறது. வடமேற்கு மூலை காற்றின் பரிபூரண சக்தியால் அமைதியையும், மனதின் ஆழ்ந்த ஒரு நிலைப்பாட்டை அளிக்கிறது.
                 அதனால், குழந்தைகளின் படுக்கையறையை வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு திசைகளில் அமைக்கலாம். வடமேற்கு மூலை மிகவும் சிறந்தது.
                 வடகிழக்கு மூலையில் அமைந்த குழந்தைகள் படிக்கும் அறை அவர்களின் மூலைக்கு சிறந்த நினைவாற்றலை அளிக்கும். வடக்கில் உள்ள படுக்கையறை நல்ல முன்னேற்றததையும், அதிக மதிப்பெண்களையும் எளிதாக பெற்றுத்தர உதவும். கிழக்கில் அமைந்த அறை நல்ல சுறுசுறுப்பை அளித்து, முதல் மாணவர்களாக மாற்றும்.
               தென்மேற்கு மூலையில், தென் கிழக்கு மூலையில், குழந்தைகள் கண்டிப்பாக படுக்கவோ, படிக்கவோ கூடாது. இத்திசைகளில் உள்ள அறைகளில் அதிகமாக உபயோகிக்கும் குழந்தைகள் படிப்பில் மிகவும் பின்தங்கியே காணப்படுவார்கள். நல்ல நடத்தையும், பழக்கவழக்கங்களும் அவர்களிடம் இருக்காது. அவர்களது எதிர்காலமும் பாதிக்கப்படும்.
                  மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் புத்தக அலமாரியை பெட்ரூமின் தென்மேற்கு மூலையில் அமைத்து பயன்படுத்துவது நல்லது. ஆனால், அதை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு மூலையில் வைக்கக் கூடாது.
                    இதேபோல், படிக்கும் மேஜையை வடக்கு, கிழக்கு திசையை நோக்கி அமரும் விதமாக போடவேண்டும். படுக்கும்போதும், படிக்கும்போதும் கண்ணாடி தெரியுமாறு இருப்பதை தவிர்க்க வேண்டும். படிக்கும் குழந்தைகளை கிழக்கில் தலை வைத்து உறங்கச் சொல்வது நல்லது. இது அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தையும், மறுநாள் நல்ல சுறுசுறுப்பையும் கொடுக்கும்.
                     இவற்றை எல்லாம் நீங்கள் பின்பற்றினால் குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 தான்!

0 comments:

கருத்துரையிடுக