தமிழ் சினிமா 2011

இணையத்தில் நான் பார்த்த வகையில், 2011ல் அதிகமாக முதல் 10 இடங்களைப் பிடித்த தமிழ் சினிமாவை எனது பார்வையில் தொகுத்து இருக்கிறேன். இதில் தமிழ் சினிமா 2011முதல் 10 படங்களில் மங்காத்தாவுக்கு முதலிடம்!



1. மங்காத்தா - அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம். 130 கோடி வசூல் ஆகி பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பிடித்தது. 2011ல் கூகுள் இணையதளத்தில் அதிக முறை பார்த்த பட்டியலில் மங்காத்தா 7வது இடத்தை பிடித்தது. இந்த படத்தின் மூலம் அஜித்துக்கு மேலும் மிகப்பெரிய மாஸ் கிடைத்தது.

2. தெய்வத் திருமகள் - விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ எல் விஜய்யின் வெற்றிப் படம். விக்ரமை புதிய கோணத்தில் காட்டியது.

3. காஞ்சனா - சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும்  இதில் நிரூபித்திருந்தார்.

4. கோ - ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது.

5. எங்கேயும் எப்போதும் - மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது.




6. வேலாயுதம் - விஜய், சந்தானத்தின்  நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. விஜயின் வெற்றி பட்டியலில் இடம் பிடித்த படம். நல்ல வசூல்.

7. 7ஆம் அறிவு - ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை ப்ளஸ் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதிக எதிர்பார்ப்பும் ஒரு காரணம். இருப்பினும் தமிழர்கள் மறந்த ஒரு தமிழனின் கதையை அறிய வைத்த பெருமை முருகதாஸையே சேரும்.

8. அவன் இவன் - விஷாலுக்கு நல்ல பெயர், பாலாவின் புது முயற்சி! மற்றபடி எதிர்பார்ப்பு அதிகம் இல்லை.

9. காவலன் - விஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த படம்.

10. ஆடுகளம் - தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம்.

3 கருத்துகள்: