பில்லா 2 ரெடி

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திருப்புமுனை ஏற்படுத்திய பில்லா படத்தின் ரீமேக் படம் கடந்த 2007ல் வெளியானது. இந்த படம் அஜித்துக்கும் திருப்புமுனையாக அமைந்தது.

‘இந்தப் படத்தில் அஜித்தை தவிர வேறு யார் நடித்தாலும் நல்லா இருக்காது. அவரை நடிக்க வையுங்கள் என அஜித்தை, ரஜினி தேர்வு செய்தார்.’ தீபாவளி அன்று வெளியான பில்லா பிரமாண்ட வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து பில்லா 2 தொடங்கும் எண்ணம் அஜித்துக்கு ஏற்பட்டது. இதற்கான வேலைகள் நடக்க ஆரம்பித்தன. ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தை இயக்கிய சக்‌ரி டொலோட்டி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் படம் தொடங்கி வெளியாக தயாராக உள்ளது.

பொங்கலுக்கு பில்லா 2 படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அறிவித்தபடி பொங்கலுக்கு பில்லா 2 போஸ்டர்களை வெளியிட்டனர். மங்காத்தாவுக்கு மாறாக இளமையுடன் இருந்த ஆக்ரோஷ அ‌ஜீ‌த்தின் புகைப்படங்கள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளன.


பில்லா இரண்டாம் பாகத்தில் டேவிட் என்ற சாதரண தமி‌‌ழ் இளைஞன் எப்படி பில்லா என்கிற டானாக மாறினான் என்பதை காட்டியிருக்கிறார்கள்.

மங்காத்தாவைவிட பில்லா 2  ஓபனிங் அதிகமாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக