நமது வாழ்க்கையின் ஏறக்குறைய கால்வாசிப் பகுதியை படுக்கை அறையில் தான் கழிக்கிறோம். நாள் முழுவதும் கடுமையாக உழைக்கும் நமக்கு நல்ல ஓய்வும் தூக்கமும் மிகவும் அவசியம். சாஸ்திர சிறப்புடன் அமைந்த படுக்கை அறையால் தான் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தை நமக்கு கொடுக்க முடியும். படுக்கை அறையை அமைப்பதற்கு சரியான பகுதி தென்மேற்கு மூலைதான்.
ஏற்கனவே தென்மேற்கு மூலையில் மாடிப்படியோ, பூஜை அறையோ அமைத்து இருந்தால் படுக்கை அறையை எந்த அளவிற்கு இந்த மாடிப்படி அல்லது பூஜை அறைக்கு அடுத்து தென்மேற்கை ஒட்டி அமைத்து கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு ஒட்டி அமைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் படுக்கை அறையை சதுரமாகவும் அமைக்கலாம். இல்லாவிட்டால், செவ்வகமாக அகலத்தை போல் நீளம் இரண்டு மடங்கிற்கு மேலே போகாதவாறு அமைக்க வேண்டும்.
படுக்கை அறையில் தெற்கு மற்றும் மேற்கு சுவர்களில் பரண் (கர்ச்ற்) அமைத்து கொள்ளலாம். பரணுக்கு கீழேயே மர வேலைப்பாடுடன் கூடிய கப்போர்டையும் அமைத்து கொள்ளலாம்.
படுக்கை அறையில் இரும்பு பெட்டி அல்லது பீரோவை வைக்க விரும்புவர்கள் தென்மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைக்க வேண்டும். படுக்கை அறையை ஒட்டியே கழிவறையை அமைக்க விரும்புபவர்கள், அதை படுக்கை அறைக்கு வடமேற்கு மூலையை ஒட்டி வருவது போல் அமைத்து கொள்ள வேண்டும்.
தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மர கப்போர்டு வைக்கும் பகுதியில் தரையை 3 முதல் 6 அங்குலம் வரை தூக்குவது நல்லது. படுக்கை அறைக்குள் கட்டிலின் தென்மேற்கு மூலையை ஒட்டி, இரும்பு பீரோ அல்லது அலமாரியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
படுக்கை அறையில் கட்டில் போட்ட பின்பு தெற்கிலும், மேற்கிலும் குறைந்த இடைவெளியும், வடக்கிலும் கிழக்கிலும் அதிக இடைவெளியும் இருக்க வேண்டும். படுக்கை அறையிலேயே டிரஸ்சிங் டேபிள் போட விரும்புவர்கள் வடமேற்கு மூலையை ஒட்டி வடக்கு அல்லது கிழக்கு முகமாக போட வேண்டும். படுக்கை அறைக்கு ஜன்னல்களை உச்சப்பகுதிகளான தென்கிழக்கு மூலையின் தெற்கு மற்றும் வடமேற்கு மூலையின் வடக்கில் வைக்க வேண்டும். ஏர்கண்டீஷனரை வடமேற்கு மூலையை ஒட்டி வருவது போல் அமைத்து கொள்ள வேண்டும்.
தென்மேற்கை ஒட்டி போடப்பட்டுள்ள கட்டில், தெற்கில் தலை வைப்பதற்கு வசதியாக தென்பக்கம் தலையணைகள் தென்புறம் 7 அடி உயரத்தில் மர வேலைப்பாடுடன் கூடிய பரண், பரணுக்கு கீழே துணிகள், பெட்ஷீட்டுகள் தலையணைகள் இரும்பு பெட்டிகள் அல்லது பீரோ ஆகியவைகளை வைத்து வெளியே தெரியாமல் அழகாக மூடி கொள்வதற்கு வசதியாக மர வேலைப்பாடுகள் கூடியப் போர்டுகள் மற்றும் வடமேற்கு மூலையை ஒட்டி அமைந்துள்ள ஜன்னல் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.

0 comments:
கருத்துரையிடுக