காரல் மார்க்ஸ்

லக மக்கள் தொகையில் பாதிப்பேர் கம்யூனிசத்தின் செங்கொடி ஆட்சியின் கீழ் இருந்த காலம் ஒன்று உண்டு. இந்த கம்யூனிசம் உருவாக முதல் வித்திட்டவர் காரல் மார்க்ஸ்.

உலகில் நடந்த பல புரட்சிகளுக்கு விதையாய் இருந்த காரல் மார்க்ஸ், பிறக்கும் போது மென்மையானவர். நடுத்தரவர்க்கத்தில் வழக்கறிஞரான ஒருவருக்கு மகனாக பிறந்தார். இவர் பிறந்த போது ஐரோப்பாவில் தொழிற்புரட்சி உச்சத்தில் இருந்தது. பசுமை புரட்சியின் போது விவசாயிகளை எப்படி நிலப்பிரபுக்கள் அடிமைகள் போன்று நடத்தினார்களோ, அப்படியே தொழில் புரட்சியின் போது முதலாளிகள், தொழிலாளிகளுக்கு குறைந்த கூலி கொடுத்து கசக்கிபிழிந்து வேலை வாங்கி கொண்டிருந்தனர்.

மார்க்ஸ் சட்டம் படித்தார். தத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றார். தொழிலாளர்களுக்கு சாதகமான ஒரு நிலை காலப்போக்கில் ஏற்படும் என்ற சோஷலிஸ்டுகளின் கருத்தை மார்க்ஸ் ஏற்கவில்லை. திடீரென்று ஒருநாள் தொழிலாளர்கள் பொங்கி எழுவார்கள், புரட்சி வெடிக்கும், இந்த புரட்சியின் இறுதியில் தொழிலாளர்களின் ஆட்சி மலரும் என்று மார்க்ஸ் உறுதியாக சொன்னார். 'இது ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது' என்று தான் அன்று மார்க்சின் வார்த்தையை உலகம் நம்பியது. ஆனால் 1917-ல் ரஷ்யா-வில் ஆகஸ்டு புரட்சி நடந்து கம்யூனிஸ்டுகள் ஆட்சியை கைப்பற்றிய போது மார்க்சின் வார்த்தைகள் உண்மை தான் என்று உலகம் ஒப்புக்கொண்டது.
                   
மார்க்ஸ் எழுதிய 'மூலதனம்' புத்தகம் தான் கம்யூனிஸ்டுகளின் 'பகவத்கீதை'. 19-ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதர் என்று போற்றப்படுகின்ற காரல் மார்க்ஸ் தன் வாழ்வில் வறுமையைத் தவிர வேறு எதையுமே பார்க்கவில்லை. இதைப்பற்றி மார்க்சின் மனைவி ஜென்னி இப்படி எழுதியிருக்கிறார்.

 'அலைக்கழிக்கப்பட்ட நிலையில் நான் அன்று வீடு திரும்பினேன். எங்கள் குட்டி தேவதை பிரான்சிஸ்கா மார்புச்சளியால் மூச்சு விட திணறிக் கொண்டிருந்தாள். வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே 3 நாட்கள் போராடி கடைசியில் அவள் தோற்றுப் போனாள். தாய்ப்பாலோடு என் நெஞ்சின் வேதனையையும், வருத்தத்தையும் சேர்த்து பருகியதால் தான் அவள் இறந்து விட்டாள் என்று நினைக்கிறேன். அவர் பிறந்த போது தொட்டில் வாங்க கூட எங்களிடம் பணமில்லை. இறந்த போது சவப்பெட்டி வாங்கக் கூட காசில்லை'  மனதை ரணப்படுத்தும் இந்த வார்த்தைகள் அத்தனையும் உருக்கமானவை.
முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தே எழுதிக்கொண்டிருந்ததால், மார்க்ஸ் எப்போதும் எவருக்கு கீழும் பணி புரிய தயாராய் இல்லை. தனது குழந்தைகள் வறுமையில் அடுத்தடுத்து இறந்து போவதை சகிக்க முடியாமல் மார்க்ஸ் ரெயில்வே நிறுவனம் ஒன்றில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். சேர்ந்த கொஞ்ச நாளிலேயே அவரது கையெழுத்து சரியில்லை என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டது ரெயில்வே நிர்வாகம்.

அந்த அளவிற்கு மோசமான கையெழுத்து காரல் மார்க்சினுடையது. அவரது மனைவி ஜென்னி தான் பல சமயங்களில் தனது கணவரின் கையெழுத்தை படித்து மார்க்சிற்கு திரும்ப சொல்வார்.
1881-ல் ஜென்னி இறந்தார். அடுத்த 2 ஆண்டுகளில் மார்க்சும் இறந்துவிட்டார். இறக்கும் தருவாயில் உலகிற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டார்.
            
'தான் வாழும் போது உலகிற்கு எந்த செய்தியையும் சொல்லாத முட்டாள் தான் இறக்கும் போது ஏதாவது சொல்ல வேண்டும் என்று கூறி முடித்தார்,  மார்க்ஸ் அவர் தொடங்கிய கம்யூனிசம் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
                                                                                                                   

0 comments:

கருத்துரையிடுக