பாதியில் கவிழ்ந்த அரசுகள்


                   ரம்பத்தில் இந்தியாவில் எதிர்க்கட்சி என்றால் அது கம்யூனிஸ்டு மட்டுமே. சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1971 வரை காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. நேருவுக்குப்பின்னர் அவரது மகள் இந்திராகாந்தி பிரதமராக பதவியேற்றார். அவரது சில நடவடிக்கைகள் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. 1971-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, காங்கிரசின் மூத்த தலைவர்கள் அவருக்கு எதிராக திரும்ப அந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.

                    அதன் பின்னர்  நடந்த தேர்தலில் தனிக்கட்சியை உருவாக்கி வெற்றி பெற்று மீண்டும் இந்திராகாந்தி பிரதமரானார். 5 ஆண்டு ஆட்சியின் இறுதிக் காலத்தில் 1975-ல் இந்திராகாந்தி தேர்தல் செல்லாது என்று அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து நாடுமுழுவதும் நெருக்கடிநிலையை இந்திராகாந்தி அமல்படுத்தினார். மேலும் ஒரு ஆண்டு இந்திராகாந்தியே பிரதமராக நீடித்தார்.
                    பழைய காங்கிரஸ் தலைவர்கள், பல மாநில கட்சிகள் இணைந்து ஜனதா என்ற கட்சியை உருவாக்கினர். நெருக்கடி நிலை கால அத்துமீறல்கள், ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அனைத்தும்  சேர்ந்து 1977 தேர்தலில் இந்திராகாந்தியை வீழ்த்தின. காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியை இழந்தது. ஜனதா கட்சி ஆட்சியை பிடித்து, மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார்.
                      இருந்தாலும் கட்சி தலைவர்களிடைய ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1979-ல் அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின்னர் சில நாட்கள் காங்கிரஸ் ஆதரவுடன் சரண்சிங் பிரதமராக இருந்தார். காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ள, 1980-ல் அந்த அரசும் கவிழ்ந்தது. அப்போது பாரதீய ஜனதா கட்சி உருவானது.
                    அதன் பின்னர் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இந்திரா காந்தி பிரதமரானார். 1984-ல் இந்திராகாந்தி படுகொலை செய் யப்பட்டதையடுத்து ராஜீவ்காந்தி பிரதமரானார். அடுத்து நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இவர் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தார். காங்கிரசுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சி யாக பாரதீய ஜனதா வளர்ந்தது.
         
              ராஜீவ்காந்தி அமைச்சரவையில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்து விலகிய வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அமைக்கப்பட்டு, 1989-ல் ஆட்சி அமைந்தது. இதற்கு பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவளித்தன. 1990 நவம்பரில் பாரதீய ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் தலைமையில் ஆட்சி அமைந்தது. 1991-ல் அந்த ஆட்சியும் கவிழ்ந்தது.
                     1991 தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு முன்னதாகவே சில கட்ட தேர்தல்கள் முடிந்திருந்தன. அந்த தேர்தலில் 195 எம்.பி.க்களை பெற்ற காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. நரசிம்மராவ் பிரதமரானார். நேரு குடும்பத்தினர் அல்லாத நரசிம்மராவ் ஆட்சி முதல்முறையாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்தது. 1996 தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக எம்.பி.க்களை கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. மற்ற கட்சிகளின் ஆதரவை பெற முடியாத நிலையில் அந்த ஆட்சி 13 நாளில் முடிவுக்கு வந்தது. பின்னர் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமர் நாற்காலியில் சில நாட்கள் இருந்தனர்.


                     அடுத்து 1998-ல் நடந்த பொதுத் தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பல்வேறு  கட்சிகள் ஆதரவு டன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. ஆனால் அதுவும் 13 மாதங்களில் கவிழ்ந்தது. இந்திய அரசியலில் அதுவே கடைசியாக கவிழ்ந்த அரசாகும். அதன்பின்னர் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் அல்லாத முதல் அரசு தனது 5 ஆண்டுகாலத்தை பூர்த்தி செய்தது. அந்த பெருமையை வாஜ்பாய் பெற்றார்.
                                                                                                                                                                                                                                  

0 comments:

கருத்துரையிடுக