வாத்சாயனர் வகுத்த 4 கட்டங்கள்
ஒவ்வொரு குடும்பத்திலும் நல்லவர்கள் உருவாக வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆரோக்கியமான செக்ஸ் உறவு குறித்த புரிதல் இருக்க வேண்டும். செக்சை பயன்படுத்தி தங்கள் உடலையும், அதன் மூலம் நாட்டின் ஆரோக்கியத்தையும் எப்படி பராமரிப்பது என்று சொல்லித் தரவே காம சாஸ்திரங்கள் ஏற்பட்டன. இப்படி எழுதப்பட்ட பல காம சாஸ்திரங்களில் வாத்சாயனர் எழுதிய காமசாஸ்திரம் சிறந்ததாக கருதப்படுகிறது.

வாத்சாயனர் தனக்கு முன்னால் பலர் எழுதிய அனைத்து நூல்களிலும் என்ன இருந்தது என்பதை தொகுத்து தந்திருந்தார். அவர்கள் சொன்ன கருத்துக்களில் ஏற்கக்கூடியது எது, ஏற்க முடியாதது எது என்பதையும் இனம்பிரித்துக் கொடுத்தார்.
காமசூத்திரத்தை படிக்கும் போது பல இடங்களில் சந்தேகம் ஏற்படலாம். அதற்கு அவரே கேள்வி கேட்டு பதிலும் சொல்கிறார். இப்போது ஏறக்குறைய அனைத்து இணைய தளங்களிலும் இருக்கும் ‘பிரிகுவன்ட்லி ஆஸ்க்டு கொஸ்டின்ஸ்‘ (எப்.ஏ.க்யூ) போன்றது அது.
ஒரு மனிதனின் வாழ்க்கையை நான்கு கட்டங்களாக பிரிக்கிறது, காமசூத்திரம். பூமியில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் இந்த பூமிக்கு வந்த யாத்ரீகர்கள் என்று தான் ரிஷிகள் கருதினார்கள். இதனால் மனிதனின் வாழ்க்கை ஒரு பயணமாகவே கருதப்பட்டது.
இந்த வாழ்வின் முதல் கட்டம் பிரம்மச்சரியம். இதற்கு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது என்று அர்த்தம் அல்ல. இளம் பிராயத்தில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும், மற்ற ஆசைகளை கல்வி முடியும் வரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதே பொருள்.
திருமணங்களில் காசி யாத்திரை என்று ஒரு சடங்கு உண்டு. அந்த காலத்தில் உயர்கல்வி காசியில் மட்டுமே இருந்தது. எனவே உள்ளூர் கல்வியை முடித்து விட்டு மேற்கல்விக்காக பிரம்மச்சாரி காசிக்கு புறப்படுவான். அப்போது தாய்மாமன் வந்து வழிமறித்து ‘மாப்பிள்ளை, படித்தது போதும், எனது மகளை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வை மேற்கொள்ளுங்கள்‘ என்று கேட்டு மகளை திருமணம் செய்து வைப்பார்.
2-வது கட்ட யாத்திரையில் தாம்பத்திய உறவில் சுகம் அனுபவிப்பது, குடும்பத்தை காப்பாற்றுவது என இணைந்து செய்ய வேண்டிய கடமைகள் பல இந்த பருவத்தில் உள்ளன.
3-வது கட்டம் வான பிரஸ்தம். இதை ஓய்வுக்காலம் எனலாம். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகன் வசம் பொறுப்களை ஒப்படைத்து விட்டு, ஒதுங்கி நின்று அவனுக்கு வழிகாட்டுவது இந்த பருவம். எந்த அதிகாரமும் இல்லாமல், ஆனால் அனைத்துமே தன் கண் அசைவுப்படியே நடப்பதை பார்த்து பெருமிதமாக வாழும் கால கட்டம்.
லோக யாத்திரையின் 4-வது கட்டம் சன்னியாசம். எல்லா பொறுப்புகளையும் துறந்து விட்டு ஓய்வாக பொழுதை கழிப்பது, வீட்டிலோ அல்லது காட்டில் இருக்கும் ரிஷிகளின் ஆசிரமத்திலோ மீதி வாழ்க்கையை கழிப்பது.
ஒவ்வொரு குடிமகனும் இப்படி முறைப்படி லோக யாத்திரை மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்து கொடுப்பது, அரசனின் கடமை என்று காமசூத்திரம் சொல்கிறது.
ஒவ்வொரு குடிமகனும் இப்படி முறைப்படி லோக யாத்திரை மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்து கொடுப்பது, அரசனின் கடமை என்று காமசூத்திரம் சொல்கிறது.
வெறும் செக்ஸ் உறவு முறைகளை பற்றி மட்டும் பட்டியலிடாமல், வாழ்க்கை தத்துவங்களை பற்றியும் தெளிவாக சொல்வது, வேறெந்த காம சாஸ்திர புத்தகத்திலும் கிடையாது என்பது தான் வாத்சாயனரின் சிறப்பு.
0 comments:
கருத்துரையிடுக