'பாராட்டு மழை'க்கு 10 வழிகள்!
                 பாராட்டுக்கு மயங்காதவர் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டு என்பது கட்டாயம் பிடிக்கும். அதுவும் நமது அன்புக்குரியவர்களிடம் இருந்து பாராட்டு வந்தால் அதில் ஒரு கூடுதல் தித்திப்பு.
                வாழ்க்கைத் துணையிடமோ அல்லது காதலியிடமோ இருந்து பாராட்டுப் பெற 10 வழிகள்...
1. முதலில் பாராட்டுங்கள்:  நீங்கள் பாராட்டினால் திரும்பப் பாராட்டுக் கிடைக்கும் என்பதை மறவாதீர்கள். அதுவும் திரும்பக் கிடைக்கும் பாராட்டுச் சற்று அதிகமாகவே இருக்கும்.
2. புரிந்துகொள்ளுங்கள்:  துணையைப் புரிந்துகொண்டு செயல்படுவது ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்குப் பிடிக்கும். சிலருக்கு அது இயல்பாக வரும் விஷயம்தான்.
3. 'மறைமுகம்' வேண்டாம்:  எப்போதுமே மறைமுகமான 'ஹின்ட்' கொடுக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்குப் பிடித்தவற்றை 'பளிச்' சென்று வெளிப்படையாகக் கூறலாம். 'பாரு... இது எனக்கு ரொம்பப் பிடிச்ச சட்டை' என்பதைப் போல.
4. 'மறைமுகம்' வேண்டும்:  நீங்கள் புதிதாக ஒரு சட்டை அல்லது உபகரணம் வாங்கியிருந்தால் அதை துணைக்குக் குறிப்பாக உணர்த்தலாம். நிச்சயமாக ஒரு வியப்பான பாராட்டுக் கிடைக்கும். 'என்னவோ இதை வாங்கிட்டேன்... ஆனா இது ஒண்ணும் அப்படி அசத்தலா இருக்கிற மாதிரித் தெரியல...' என்று கொக்கி போட்டுப் பாருங்களேன்.
5. புகைப்படம் கவரும்:  இன்று பாராட்டுப் பெறுவதற்கு எளிதான, வசதியான வழி, புகைப்படம். உங்களின் ஒரு புதிய புகைப்படம் துணையைக் கவரும். இணையதளத்தில் உங்களின் புகைப்படத்தை மாற்றிப் பாருங்களேன்.
6. புதிய சிகையலங்காரம்:  புதிய, பொருத்தமான சிகையலங்காரம், எவர் கவனத்தில் இருந்தும் தப்பாது. உங்களுக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தரவும் தவறாது. இது பழைய உத்திதான், ஆனால் நிச்சயமாக வேலை செய்யும்.
7. 'இணைந்து' போங்கள்:  உங்களின் துணைக்கு ஒரு குறிப்பிட்ட 'ஷேடு' பிடிக்கும் என்றால் அந¢த குறிப்பிட்ட ஷேடில் ஆடை, ஷு, பேக் என்று வாங்கிப் பாருங்கள். நிச்சயமாக அவரின் கண்கள் விரியும்.
8. கேளுங்கள்:  நீங்கள் நாசூக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதில் வல்லவர் இல்லை என்றால், அல்லது அம்மாதிரி சமிக்ஞைகளை அவர் புரிந்துகொள்ளக்கூடியவர் அல்ல என்றால், தயக்கமே இல்லாமல் கேளுங்கள்.
9. ஜாலியாக பேசுங்கள்:  'உனக்குப் பழைய ரசனையெல்லாம் போயிடுச்சு', 'என்னோட புது டிரெஸ் உனக்குப் பிடிச்ச மாதிரி தெரியலையே' என்று ஜாலியாக, கொஞ்சம் கிண்டலாகப் பேசுங்கள். அதற்குத் தயக்கமோ, கூச்சமோ காட்ட வேண்டாம்.
10. 'ஸ்டைலை' மாற்றுங்கள்:  ஒரே மாதிரியான பாணி என்று இல்லாமல் திடீரென்று அதிரடியாக 'ஸ்டைலை' மாற்றிப் பாருங்கள். முன்பு நீங்கள் விரும்பி அணிந்த ஆடையை அணிந்து காட்டுங்கள். வாழ்வில் ஒரு மாற்றம் இருக்கட்டுமே!.......
                          ----------------------------------------------------

1 கருத்து: