கடாய் முர்க்


தேவையான பொருட்கள்

சிக்கன்             - 500 கிராம்
வெங்காயம்    -  100 கிராம்
தக்காளி            -  100 கிராம்
பட்டை            -  5 கிராம்
இலவங்கம்   -  3 கிராம்
மிளகாய்         -  10 கிராம்
பூண்டு             -  25 கிராம்
இஞ்சி               -  25 கிராம்
மிளகாய்த்தூள்   -  10 கிராம்
மஞ்சள்தூள்         -  1 தேக்கரண்டி
கொத்தமல்லி     -  15 கிராம்
எண்ணைய்         -  50 மில்லி
உப்பு            -  தேவைக்கேற்ப
தேங்காய்ப்பால்      -  தேவைக்கேற்ப  

செய்முறை

                  வெங்காயம், தக்காளி நறுக்கி இஞ்சி, பூண்டை விழுதாக்கிக் கொள்ளவும்.
                  இரும்பு வாணலியில் எண்ணையை சூடு செய்து எல்லா கரம் மசாலாவையும் சேர்த்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
                  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
                  மிளகாய் மஞ்சள் தனியா பவுடர்களை சேர்த்து நன்றாக கிளறி நீர் தெளிக்கவும்,
                   தக்காளியை வெங்காயத்துடன் சேர்க்கவும்,
சிக்கன் தேங்காய் பால் சேர்த்து சிக்கன் வேகும் வரை நீர் இல்லாமல் உலர்ந்து வரும் வரை சமைக்கவும்,
                   தாளிக்கவும் கொத்தமல்லியுடன் அலங்கரிக்கவும்,
                   பரோட்டா அல்லது புலாவுடன் சேர்த்து இதைப் பரிமாறலாம்.

                                    ------------------------------------

                                                  கோலி கபாப்


தேவையான பொருட்கள்


மட்டன்                    - 1 கிலோ
கடலை மாவு        - 1 கப்
கொத்தமல்லி       - 1 கப்
புதினா             - 1 கப்
கரம் மசாலா        - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்        - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்   - 1 தேக்கரண்டி
சோடா மாவு         -  தேவைக்கேற்ப
எண்ணைய்         -  வறுப்பதற்கு
உப்பு            -  தேவைக்கேற்ப

செய்முறை

                    சோடாமாவு, எண்ணையை தவிர்த்து மற்ற பொருட்களை அரைத்து கொள்ளவும்
                     அரைத்த விழுதில் சோடாமாவு சேர்க்கவும் நன்றாக சிறுசிறு உருண்டையாகச் செய்யவும்.
                      எண்ணையை சூடு செய்து அதில் கோலி கபாபை நன்றாக வறுத்து எடுக்கவும்.
                      பச்சை மிளகாய் சட்னி அல்லது ரொட்டித் துண்டு மற்றும் வட்டமாக அகலவாக்கில் நறுக்கிய வெங்காயத் துண்டுகளுடன் இதனை சூடாகப் பரிமாறவும்.
                                     --------------------------------

0 comments:

கருத்துரையிடுக