இப்படி இருந்தா நல்லாத்தான் இருக்கும்.?

ஒரு நாள் இரவில் ஆங்கில செய்தி சேனல் பார்த்துக் கொண்டு இருந்தேன். இடையே விளம்பரம் போடப்பட்டது. அப்போது அந்த விளம்பரம் வந்தது. அருமையான விளம்பரம். நானும் ஞாபகம் படுத்திப் பார்க்கிறேன், தமிழில் இதுவரை அந்த விளம்பரம் வந்தததாக தெரியவில்லை.


அந்த விளம்பரத்தின் ஞாபகம் மறுநாள் நான் அலுவலகத்திற்கு சென்ற போது வந்தது. காரணம்,

பஸ் ஸ்டாண்டில் ரோட்டில் ஒருவர் காரித் துப்பினார். எதிரே இருந்த கடையில் இருந்து, குப்பைகள் ரோட்டில் வந்து விழுந்தது. இன்னும் எரிச்சலூட்டும் பல சம்பவங்கள் நடந்தன.

இப்போது தெரிந்து இருக்கும் உங்களுக்கு, நான் எந்த மாதிரியான விளம்பரத்தை தெரிவித்தேன் என்று.

அமீர்கான் அந்த விளம்பரத்தில் நடித்து இருந்தார்.

'இன்கிரிடிபில் இந்தியா' என்ற வாசகத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு காதல் ஜோடி இந்தியாவுக்கு வருகிறார்கள். விமானநிலையத்தில் இருந்து அவர்கள் வெளியே வருகிறார்கள், அப்போது கார் டிரைவர் ஒருவர் வெத்தலைபோட்டு எச்சிலை ரோட்டில் துப்புகிறார். 2 பேரும் அருவருப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். பிறகு காரில் சென்று கொண்டு இருக்கும் போது, அழகான காட்சிகளை காரில் இருந்த படியே போட்டே எடுக்கிறார்கள். அப்போது அவர்கள் காரை முந்திச் செல்லும் ஒரு பஸ்சில் இருந்து ஒரு சிறுவன் வாழைப் பழத்தை தின்றுவிட்டு, தோலை வெளியே தூக்கி எறிய, அது அந்த வெளிநாட்டு பெண்ணின் மீது விழுகிறது. காரின் டிரைவர் சிரித்த படியே இதெல்லாம் சகஜம் என்பது போன்று கையை அசைக்கிறார். பிறகு ஒரு பாலத்தில் சென்று கொண்டு இருக்கும் போது ஒரு இடத்தில் மற்றொரு கார் நிறுத்தப்பட்டு உடனே அதில் இருந்து ஒரு சிறுவனும், அவனின் தாயும் இறங்கி, ரோட்டின் ஓரமாக சென்று அவனை உச்சா போக வைக்கிறார். இதைப் பார்த்தும் வெளிநாட்டினர் முகம் சுளிக்கின்றனர். பிறகு அமீர்கான் பேசுகிறார். 'இதுபோன்று நடந்து கொள்ள வேண்டாம். நம் இந்தியாவை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்வோம்' என்று முடிக்கிறார்.

வெளிநாடு போன்று இந்தியாவிலும் வெளி இடங்கள் சுத்தமாக இருந்தால் நல்லாத்தான் இருக்கும்.

உலகில் 2-வது அதிகமான மக்கள் தொகை கொண்ட, பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் உள்ள, பல்வேறு பிரச்சினைகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டு இருக்கும் நம்முடைய நாட்டில் இதைக் கடைபிடிப்பது என்னவோ கொஞ்சம் சிரமம் தான். ஆனா சின்ன மாற்றத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். அதையே அந்த விளம்பமும் வலியுறுத்தியது. தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வீட்டைப் போல நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்வோம் என்று ஆரம்பித்தால் இது சத்தியம்.

0 comments:

கருத்துரையிடுக