சமீபகாலங்களாக விவசாயத்தில் நஷ்டமே ஏற்பட்டு வருவதால், பரம்பரை பரம்பரையாக விவசாயத்தையே தங்கள் வாழ்வாதார தொழிலாகக் கொண்டிருந்த ஏராளமான மக்கள், தங்கள் தாயினும் மேலாக மதித்து வந்த தங்கள் விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளகவோ, தொழிற்சாலைகளாகவோ மாற்றுவதற்கு விட்டு விட்டு, தாங்களும் வேறு வேலை தேடிச் செல்லும் ஒரு புதிய அத்தியாயம் பல இடங்களில் தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 3 கோடியே 25 லட்சம் ஏக்கர். இதில் ஒரு கோடியே 27 லட் சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி கொண்ட விவசாய விளை நிலங்களாகவும், மானாவாரி சாகுபடி நிலங்களாகவும் உள்ளன.
விவசாயத்தில் எவ்வித லாபமும் இல்லை. விதைகள், உரங்கள், இடுபொருட்களின் விலைகள், விவசாய கூலி என்று கணக்கு பார் த்துவிட்டு, விளை பொருளின் விலையையும் கணக்கிட்டால், உழக்கு கூட மிஞ்சவில்லை எ ன்று கூறி, பல விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்கத் தொடங்கி உள்ள அவலநிலை தமிழ்நாட்டில் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் இந்த அபாயகரமான நிலைமையை ஒரு பட்டியலிட்டு காட்டி உள்ளார். தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகளுக்கும், வீட்டு மனைகளுக்கும் மாறும் இந்த நிலை பற்றி அவர் கூறும்போது,
கடந்த 30 ஆண்டுகளில் 15 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இப்போது விளைநிலங்களாக இல்லை.1980&ம் ஆண்டில் இருந்து இதுவரையில் ஆண்டுக்கு 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இப்படி வேளாண் பாதையில் இருந்து விலகிச்சென்று கொண்டு இருக்கின்றன. இதே நிலை நீடித்தால், தமிழ்நாட்டில் எதிர்கால சந் ததிக்கு உணவுப்பொருள் உற்பத்தி கிடைக்காது. வயல்களையும், பண்ணை நிலங்களையும், தோட்டங்களையும் தேடித்தான் கண்டுபிடிக்கும் நிலை உருவாகிவிடக்கூடாது.
உணவு உற்பத்தி இல்லாமல் வேறு எந்த வள ர்ச்சி இருந்தும், எந்தவித பயனும் இல்லை. விவசாய நிலங்கள் எப்போதும் விவசாய நிலங்களாகவே இருக்க வேண்டும். எனவே, வேளாண் விளை நிலங்களை வீட்டு மனைகள £க மாற்றுவதற்கு அரசு கடுமையான தடை உத் தரவுகளை பிறப்பிக்க வேண்டும். விவசாய காரணங்கள் தவிர, வேறு காரணங்களுக்காக விவசாய நிலத்தை விற்பனை செய்தால் அதை சப்-ரிஜிஸ்திரார் அலுவலகம் தடை செய்யவே ண்டும்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், இ டுபொருள், உரம் போன்றவை குறைந்த விலையில் கிடைக்கவும் மத்திய, மாநில அரசுக ளால் தனி கவனம் செலுத்தப்படவேண்டும்.
விவசாய தொழிலை லாபகரமாக்கும் தொழிலாக்குவதற்கு ஏற்ற வகையில் எந்தெந்த பயிர்களை, எந்தெந்த வகையில், சாகுபடி செய்தால் உரிய லாபம் கிடைக்கும்?
தண்ணீரை குறைவாக பயன்படுத்தி பயிரிடக்கூடிய பயிர்கள் எவை?
மானாவாரி நிலங்கள் உள்பட எல்லா நிலங்களிலும் என்னென்ன பயிர்களை பயிரிடலாம்?
என்னென்ன நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம்? என்பது போன்ற விவரங்களை வேளாண்மைத்துறை முழு மூச்சுடன் நமது விவசாயிகளுக்கு ஆலோசனைகளாகவும், தேவையான உதவிகளையும் வழங்க வேண்டும்.
எதிர்கால சந்ததி உணவு உற்பத்தியில் தன் னிறைவு பெற விவசாய தொழிலுக்கு ஒரு உரிய அங்கீகாரம் கொடுத்து, வேறு தொழிலுக்கு போனவர்கள் கூட விவசாயத் தொழிலுக்கு தி ரும்ப வரும் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
nice
பதிலளிநீக்கு