தோப்புக்கரணம்...?

         நமது முன்னோர்கள் தெரிவித்த ஒவ்வொரு முறையிலும், அறிவியல் பூர்வமான உண்மைகளை மறைத்து நமக்கு தெரிவித்து உள்ளனர். அதிகாலையில் வாசலில் மாட்டுச் சானம் தெளித்து கோலம் போடுவதல் இருந்து இரவில் மரத்துக்கு அடியில் படுக்க கூடாது என்பது வரை ஒவ்வொரு முறையிலும் முற்போக்கான, அற்புதமான அறிவியல் உண்மையை மறைத்து வைத்து தெரிவித்து உள்ளனர். இதுபோன்ற பல உதாரணங்களை இந்து மத்தில் காண முடியும். நேரடியாக இதைத் தெரிவித்தால் அதை ஏற்கும் பக்குவம் நமக்கு இருக்காது என்பது முன்னோர்களுக்கு தெரிந்து இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.  
    நாம் விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு வேண்டிக் கொள்வதைப் பார்த்திருப்போம். இது ஒரு சிறந்த யோகா பயிற்சி ஆகும். அதை ஆன்மிக வழியில் நமது முன்னோர்கள் நமக்கு வழங்கி உள்ளனர். மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் இதையே 'சூப்பர் பிரைன் யோகா' என்கின்றனர். இதைச் சொல்லித்தரும் பயிற்சியாளர்கள் இந்தப் பயிற்சிக்கு தற்காப்புரிமை என்றெல்லாம் உருவாக்கியுள்ளார்கள். ஆனால் இதன் பிறப்பிடம் நமது பாரதம் ஆகும். அதிலும் நமது தமிழகம் ஆகும்.
     இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார்.
    தோப்புக்கரணம் போடுவதால் மூளை பலம்பெறுகிறது. குழந்தைகளை அவர்களுக்கே உரிய தன்மையுடன் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
முதுமையால் ஏற்படும் மறதி, மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றை நீக்குகிறது.

    
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
    2000-ல், அமெரிக்காவில் காப்புரிமை பெறப்பட்ட 5 ஆயிரம் மூலிகைகளில் 80 சதவீதம் இந்தியாவில் இருந்து தான் பெறப்பட்டது என்கிறார், தேசிய அறிவியல் கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் வினோத்குமார்குப்தா.
    தோப்புக்கரணத்தை ஒரு ஆன்மிகப் பயிற்சியாக நம் முன்னோர்கள் நமக்குத் தந்தார்கள். ஆனால், இன்றோ மேற்கத்திய கலாச்சாரத்தாலும், போலியான பகுத்தறிவு வாதத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பயிற்சி இப்போது மறக்கடிக்கப்பட்டு வருகிறது.
    ஒரு காலத்தில் மஞ்சள், பாசுமதி, வேம்பு, அரிசி இவற்றிற்கும் இந்தக் கதிதான் நேர்ந்தது. இன்னும் கொஞ்ச காலத்தில் தோப்புக்கரணம் என்ற பெயர் நீக்கப்பட்டு, அதற்கு பிள்ளையாருடனும், நம் ஆன்மிக வாழ்வுடனும் இருந்த பிணைப்புகள் எல்லாம் மறைந்து போய்விடும். பின்பு, மேற்கத்திய உலகில் இருந்து  தோப்புக்கரணம் 'சூப்பர் பிரைன் யோகா' என்ற பெயரில் காப்புரிமையுடன், நம் நாட்டிற்கு உலா வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
                                                          -----------------------

0 comments:

கருத்துரையிடுக