என்றும் நலம்வாழ  ஏழு (7) டாக்டர்கள்

               என்றும் நலவாழ்வு வாழ நீங்கள் நாட வேண்டிய டாக்டர்கள் 7  பேர். இவர்கள் எம்.எஸ், எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படித்தவர்கள் அல்ல. ஆனால் அனைத்து மருத்துவ நிபுணர்களும் இவர்கள் நல்ல சிகிச்சை தருகிறார்கள் என்று சான்றளிக்கிறார்கள். இவர்கள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உடல் நலனைக் கட் டிக்காப்பதில் கைதேர்ந்த நிபுணர்கள். அவர்கள் யாரென்று அடையாளம் தெரிய வேண்டுமா? இதோ அவர்கள் முகவரி........

டாக்டர் -1

                 காலையில் எழுந்ததும் இவரிடம் உடலைக் காட்டுவதுதான், நமது  உடலைக் செக்கப் செய்துகொள்ளும் செலவில்லாத வழி. அவர்  உடனே பல வியாதிகளுக்கு மருந்தை உடலில் செலுத்திவிடுவார்.  காசு எதுவும் கேட்கமாட்டார். அந்த டாக்டர் வேறு யாருமல்ல  சூரியபகவான்தான்.
சூரிய ஒளி புகாத வீட்டில் மருத்துவன் நுழைவான் என்பது  பழமொழி. சூரிய ஒளி உடலுக்கு நல்லது என்பதைக் கேள்விப்பட்டு  இருப்பீர்கள். அது என்னென்ன நலன்களை தருகிறது என்பது  தெரியுமா?

* சருமத்திற்கு பொலிவு தருகிறது. உடலில் நோய் எதிர்ப்புப் பணியைச்  செய்யும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகம் உற்பத்தியாக உதவும்.  இதனால் நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும்.

* சூரிய ஒளி உணவு செரிமானத்தன்மையை அதிகரிப்பதில் முக்கியப்  பங்கு வகிக்கிறது. கழிவுகளை வெளியேற்ற உதவும், வளர்ச்சிதை  மாற்றத்தில் துணைபுரியும்.

* உடல் ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் டி  கிடைக்கச் செய்கிறது. சமீபத்திய ஆய்வு மாலை இளம்வெயிலில்  நடைபயணம் செய்வது ஆண்மை வீரியம் கிடைக்க உதவுவதாக  கூறுகிறது.

* காலை, மாலை இளம் வெயிலின் மூலம் உடலில் சூரிய ஒளி படு வதால் புறஊதாக்கதிர்கள் உடலில் படும். இது வைரஸ், பாக்டீரியா,  ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது.  உச்சிவெயிலில் கிடைக்கும் அதிகமான புறஊதாக்கதிர் உடலுக்கு  தீங்கு விளைவிக்கும்.

* வேனற்கட்டி, முகப்பரு, தோல் கொப்புளங்கள், பூஞ்சை பரவி செதி ல்கள் படிதல் போன்றவற்றை குணமாக்கும்.

* இன்னும் பல மருத்துவ குணங்கள் சூரிய ஒளிக்கு உண்டு. சூரிய  ஒளி படாமல் வாழுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட 70 சதவீத  வாய்ப்புகள் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

       நலம் வாழ விரும்புபவர்கள் நிச்சயம் காலை, மாலை வெயிலில் சிறிது  நேரம் (குறைந்தது 10 நிமிடங்கள்) உலவும்படியான பணிகளைச்  செய்தாலே போதும்.  இந்த நன்மைகளெல்லாம் உங்களுக்குக் கிடை த்துவிடும்.

டாக்டர்-2

          கசப்பில்லா மருந்து தருவது இவரின் வாடிக்கை. எனவே அனைவரும்  மகிழ்ச்சியுடனே இவர் தரும் மருந்தை சாப்பிடுவார்கள். நோயில்லாத  நேரங்களிலும் எல்லாரும் இந்த மருந்தைச் சாப்பிடுகிறார்கள். மற்றம ருந்துகள் ஒருநாளைக்கு 3 டோஸ் என்றால் இந்த மருந்தை தினமும்  8 முதல் 10 டோஸ் (டம்ளர்) சாப்பிடலாம். அத்தனை சர்வசஞ்சீகை மூலிகை அது.
புரியவில்லையா...தண்ணீர்தாங்க அந்த மருத்துவர். இயற்கை தந்த  அற்புத மூலிகை இது. உடல் அதிகப்படியாய் இருப்பது தண்ணீர்தான்.  உடலில் ஒவ்வொரு செல்லும் பாதிக்குமேல் தண்ணீரைக் கொண்டி ருக்கிறது. தண்ணீர் உடலை எவ்வாறெல்லாம் வளப்படுத்துகிறது  தெரியுமா?

* சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் அடங்கிய  எலக்ட்ரோலைட் என்னும் மூலக்கூறு உடல் இயக்கத்துக்கு  அவசியமானது. போதிய தண்ணீர் கிடைத்தால்தான் உணவுகளில்  இருந்து எலக்ட்ரோலைட் கிடைக்க ஏதுவாகும். இல்லாவிட்டால் செல் கள் வறண்டுவிடும் அல்லது மாண்டுபோகும்.

* உடல் தளதளவென்று அழகு பெற தண்ணீர் அவசியம். உடலில்  கொலஸ்ட்ரால் (கெட்ட கொழுப்பு) அதிகமாகாமல் தடுக்கும்.

* தினமும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு 2 கிளாஸ்  தண்ணீர் குடிக்க வேண்டும். காலையும் மாலையும் 1 மணி நேரம்  நடைபயணம் செய்தால் குடற்பகுதியில் பாதிப்புகளே வராது என்கிறார்  மருத்துவ நிபுணர் ஒருவர்.

* தண்ணீர் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும். இதயம், மூளைக்குச்  செல்லும் தமனிகள் தடையின்றி செயல்பட உதவுகிறது.

* மூளை 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் பருகுவதற்கேற்ப  மூளை புத்துணர்ச்சி பெறும். இதனால் நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். நினைவுத்திறன் அதிகரிக்கும், ஞாபகமறதி வியாதிகள்  ஏற்படாமல் தடுக்கும்.
தினமும் குறைந்தது 8 டம்ளர் (2 லிட்டர்) நீர் பருகுவது ஆரோக்கிய த்திற்கு அவசியம். உங்களின் தாகத்தில்தான் உடல் ஆரோக்கியத்தின் தாக்கம் இருக்கிறது என்கிறார் புளோரிடா மருத்துவ நிபுணர்  பத்மாங்கலிட்ஜ்.

டாக்டர்-3

           மூச்சை இழுத்துவிடுங்கள் என்றுதான் இந்த டாக்டரும் கூறுகிறார்.  அடுத்த நிமிடம் இவரது சிகிச்சையால் புத்துணர்வு அடைகிறார்கள்  அனைவரும். சுத்தமான காற்றுதான் நம்மை நலமாக வைக்கும் மூன்றாவது இயற்கை மருத்துவர்.
       காற்று உடலுக்குத் தரும் நன்மைகள் பல. காற்றுதான் உடலின்  எரிபொருள். நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகவும், செல் கள் வளர்ச்சிதை மாற்றம் அடையவும் காற்று தேவை. ஒரு நாளைக்கு  சுமார் 7ஆயிரத்து 50 லிட்டர் காற்று உள்ளிழுக்கப்படுகிறது.

* காற்று உணவு செரிமானம் ஆக உதவுகிறது.

* ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருக்க தூய காற்று அவசியம்.

* நல்ல காற்றை சுவாசிக்கும்போதுதான் நரம்புகள் ஆரோக்கியம்  பெறும்.

              ஒவ்வொரு சுவாசத்திலும் நம் நலவாழ்வு இருக்கிறது என்பதை  மறந்துவிடாதீர்கள். காற்றை மாசுபடுத்தாமல் வாழ்வதே நாம் செய்யும்  முதல் அறப்பணி.

டாக்டர்-4

            கொஞ்சம் கடினமான சிகிச்சை முறைகளை கடைபிடிப்பவர் இவர்.  தினமும் கொஞ்ச நேரம் தனக்கு ஒதுக்கக் கேட்கிறார். அவர் சொல் வதைக் கேட்டால் பலமடங்கு பலன் கிடைப்பதாக நலம் பெற்றவர்கள்  கூறுகிறார்கள்.
தேகப்பயிற்சிதான் உடலை உறுதிப்படுத்தும் நான்காவது மருத்துவர்.  உடற்பயிற்சியால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அவற்றில்  முக்கியமான சிலவற்றைச் சொல்கிறோம்...

* உடற்பயிற்சி உடல்வலியைத் தருமென்று நீங்கள் நினைப்பதுண்டா?  அது மிகவும் தவறு. உடற்பயிற்சி உற்சாகம் தருவதாகும். நீங்கள் என் றாவது மன அழுத்தம் மிகுந்து காணப்பட்டால் 30 நிமிடம்  உடற்பயிற்சியில் ஈடுபட்டுப் பாருங்கள். மனமாற்றம் ஏற்பட்டு அமைதி  சூழ்ந்து கொள்ளும்.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம்  வராமல் தடுக்கும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உத வுவதன் மூலம் பல வியாதிகளை தடுக்கும்.

* உடற்பயிற்சியால் சுவாசம் சீராகும். உடலுக்கு பலமடங்கு ஆற்றலும்  கிடைக்கும். அத்துடன் நிம்மதியான உறக்கமும் கிடைக்கச் செய்யும்.  இன்னுமொரு முக்கியமான விஷயம் உடலுறவுக்கான ஊக்கத்தை த ருவதில் உடற்பயிற்சி பெரும்பங்கு இருக்கிறது.

டாக்டர்-5

             இவர் கண்டிப்பான பேர்வழி. கட்டுப்பாடுகளை விதித்து உடல்நலனைக்  காப்பவர். கண்டிப்பு என்பதால் இவரை அணுகுபவர்கள் குறைவுதான்.  ஆனால் அணுகியவர்கள் நலம் பெறுவது உண்மை. எனவே இவரைக்  கொண்டாடாதவர்கள் இல்லை.
             டயட்தான் நலவாழ்வுதரும் 5-வது மருத்துவர். டயட் என்றால் உண வுக் கட்டுப்பாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஊட்டம் நிறைந்த சத்துணவு சாப்பிடுவதே டயட் ஆகும். நாம்  இஸ்டம்போல் சாப்பிட்டு நோய்வாய்ப்படுவதால்தான் டாக்டர்கள் உண வுக் கட்டுப்பாட்டை (டயட்) பின்பற்றச் சொல்வார்கள்.

* டயட் கடைபிடிப்பது உடல் எடையை கட்டுப்பட்டுக்குள் வைக்கும்.  கொழுப்பு படியாமல் தடுக்கும். எப்போதும் டயட் கடைபிடிப்பவர்களை  நீரிழிவு, புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகள் அண்டாது. கோபம்,  மனஅழுத்தம், உயர்ரத்த அழுத்தம் போன்றவையும் வராது.

டாக்டர்-6

            மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்ததுதான் உங்கள் உடல் நலத்திற்கு கேடு. எனவே கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்பதுதான் இவரின்  ஆலோசனை. அதைப் பின்பற்றியவர்கள் நிம்மதியான உறக்கமும், ந ல்ல புத்துணர்ச்சியும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.
             இந்த டாக்டரின் பெயர் ஓய்வு. உழைப்பதற்கேற்ற ஓய்வு எடுத்தால்தான் மறுநாள் பணிகளை சுறுசுறுப்பாகச் செய்ய முடியும். ஓய்வு நேரத்தில் உடல் தளர்வு நிலைக்குச் சென்று தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.  மூளையில் புதிய செல்கள் உற்பத்தி ஆகின்றன.
             ஓய்வு உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் மனநலத்திற்கும் உதவுகிறது.  கவலை, மனஅழுத்தம் போன்றவற்றைக் குறைக்கிறது. ஒவ்வொருவ ரும் தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஒன்றிரண்டு மணி  நேரம் வேலைசெய்யாமல் தளர்வாக இருந்து கலந்துறவாட வேண்டும்  அதுதான் பூரண நலம்தரும் ஓய்வாகும்.

டாக்டர்-7

               இவர் ஒரு அமைதிப் பேர்வழி. பல நேரங்களில் இவர் பேசும் மவுன  மொழி யாருக்கும் புரிவதில்லை. என்ன நடந்தாலும் பொருத்திருந்து  பார் நல்ல வழிபிறக்கும் எதுக்கும் ஒரு நேரம் வரவேண்டும் என்று  தத்துவம் பேசுவார். இதைக் கேட்டு எரிச்சல் அடைபவர்கள் பலர். பின்னாளில் அவர் சொன்னதுபோல் நடந்து நல்ல மாற்றம்  கிடைக்கும்போது அவரையே மறந்து மகிழ்ச்சியில் மூழ்கிவிடுவார்கள்  அனைவரும்.
               ஆமாம் இவர்தான் காலம் என்னும் கடைசி மருத்துவர். இவர் எந்த  வியாதியைத் தீர்க்கிறாரோ இல்லையோ கவலை என்னும் கொடிய  வியாதியைத் தீர்ப்பதில் இவரை மிஞ்சிய மருத்துவர் உலகில்  கிடையாது.
காலமே காயம் ஆற்றும் சிறந்த மருந்து என்பார்கள். அழுதவர் அடுத்த கணமே சிரிப்பது காலம் செய்யும் மாற்றம் என்பதை அனுபவ த்தில்தான் உணர முடியும்!

             ----------------------------------

0 comments:

கருத்துரையிடுக