1. நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால், உன்னுடைய பலவீனங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

2. உழைப்பின் வேர்வை கசக்கும் ஆனால் அதன் கனிகள் இனிக்கும்.

3. குனியாதே சுமப்பாய்; நிமிர்ந்தால் உயர்வாய்.

4. அறிவாளிகளின் வார்த்தைகளைவிட அனுபவசாலிகளின் வார்த்தை பயனுள்ளதாக இருக்கும்.

5. புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத இருட்டறை போன்றது.

6. துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மறக்காதே.

7. அனுபவம் சிறந்த ஆசிரியர் தான்; ஆனால் அவருக்கு கொடுக்கும் சம்பளம் மிக அதிகம்.

8. அழுகையும், கோபமும் பலவீனத்தின் ஆயுதங்கள்.

9. தன் தவறுக்கு ஒருவன் சூட்டும் பெயரே அனுபவம்.

10. துன்பத்தை அனுபவிக்காதவன், வாழ்வின் சுவையை அறியாதவன்.

0 comments:

கருத்துரையிடுக