சுறா



மீன்களில் கிட்டத்தட்ட 1,500 வகைகள் உள்ளன. இந்த மீன்களில் மிகவும் பெரியது திமிங்கல சுறா. இது 21 மீட்டர் நீளம் வரை வளரும். இதுதான் மீன்களிலேயே வேகமாக நீந்தக்கூடியது. 45 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள இரையை  அப்படியே  விழுங்கிவிடும். பசி  நேரம்    என்-றால் 91 கிலோ எடை கொண்ட ஆமையைக்கூட தின்றுவிடும்.
கடலில் வாழும் பெரிய உயிரினங்களை கொன்று தின்பதுதான் இதன் பொழுதுபோக்கு. காட்டில் புலி எப்படியோ அது போன்று கடலில் சுறா. அதனால் தான் இதற்கு கடற்புலி என்று பெயர்.
தனது வலிமையான வாலால் இரையை அடித்து வீழ்த்தும். எப்போதும் சுறுசுறுப்பாக நீந்திக்கொண்டே சிக்கிய மீன்களை எல்லாம் விழுங்கிக்கொண்டே போகும்.
சுறாமீன்களின் உட்கூடு குருத்தெலும்பால் ஆனது. தாய்சுறாவின் கருப்பையில் இருந்து குட்டிகள் வெளி வருகின்றன. சுறாக்களில் மிகவும் கொடூரமானது வெண்சுறா. இது சுமார் 12 மீட்டர் நீளம் கொண்டது. இதை விட பெரிய சுறாவும் உண்டு. வெண் சுறாவை விட பெரிதான புலி போல் வரிகளை கொண்ட புலிசுறா மகா சாது. இது முட்டைகளை ஜவ்வினால் ஆன ஒரு பைக்குள் இட்டுவைக்கிறது. அந்த பையை தாவரங்களுக்கு இடையே போட்டுவிட்டு போய்விடும். கொஞ்ச நாட்களில் முட்டை பொரித்து குஞ்சுகள் ஜவ்வுப்பையை கிழித்துக்கொண்டு வெளியே வரும்.
பெரிய கண்களும், அகலமான மூக்கும், தட்டையான தலையும் கொண்டது, ‘கொம்பன்சுறா‘. உடலை விட இரண்டு மடங்கு  நீளமான  வாலை  கொண்டது.  போர்சுறா என்பது 2 மீட்டர் நீளம் உடையது. இவை ஒன்று சேர்ந்தால் பெரிய திமிங்கலங்களைக்கூட ஓடஓட விரட்டும். இதுபோக வள்ளுவன் சுறா, பால்சுறா போன்றவையும் உள்ளன.
சுறாவின் கல்லீரலில் இருந்துதான் மீன் எண்ணை எடுக்கிறார்கள். சுறாக்க-ளில் அதிகமாக மனிதனுக்கு பயன்படுவது இரிளோடான் சுறா. இதன் தோலில் இருந்து மணிபர்ஸ் தயாரிக்கப்படுகிறது.


                        ----------------------

0 comments:

கருத்துரையிடுக