இட்லி காய்கறி உருண்டை



தேவையான பொருட்கள்:

இட்லி                                - 10
சின்ன வெங்காயம்     - 5
பச்சை மிளகாய்            - 1
கேரட்                                - 50 கிராம்
முட்டைக்கோஸ்        - 50 கிராம்
பச்சைப்பட்டாணி         - 50 கிராம்
எண்ணை                         - தேவையான அளவு
உப்பு                                   - தேவையான அளவு

செய்முறை:

பச்சைப்பட்டாணி மற்றும் முட்டைக்கோசை வேகவைத்துக் கொள்ளவும்¢. வாணலியில் எண்ணை ஊற்றி, அத்துடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, பிறகு வேகவைத்த காய்கறிகளையும் போட்டு வதக்கவும். வதக்கிய கலவையுடன் உதிர்¢த்து வைத்திற்கும் இட்லியைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இதனை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கவும். பழங்காலத்தில் உள்ள Ôஉருண்டைச்சோறைÕ ஞாபகப்படுத்தும் இது, பார்ப்பதற்கு வண்ணமயமாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

ஊட்டச்சத்து விவரங்கள்:

கேரட் வைட்டமின் ÔஏÕ நிறைந்தது. இது குழந்தைகளின் பார்வைத்திறனை அதிகப்படுத்தும். பச்சைப்பட்டாணியில் புரதம் நிறைந்திருப்பதால், சீரான உடல் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.

---------------

                                                          அவல் லட்டு

தேவையான பொருட்கள்:

முந்திரிப்பருப்பு        - 15
உலர்ந்த திராட்சை  - 15
அவல்                           - 50 கிராம்
வறுகடலை               - 50 கிராம்
வெல்லம்                    - 50 கிராம்

செய்முறை:

அவல், வறுகடலை மற்றும் வெல்லம் மூன்றையும் நன்கு அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். பொடியாக்கிய பொருட்களுடன் சிறிதளவு வெந்நீர் ஊற்றி உருண்டைகளாகப் பிடித்து, அதன் மேல்பகுதியில் முந்திரிப்பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சைகளைப் பதித்து வைக்கவும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ஊட்டச்சத்து விவரங்கள்:

அவல், வெல்லம், உலர்ந்த திராட்சை ஆகியவை இரும்புச்சத்து நிறைந்தவை. வறுகடலையில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இந்த சத்துக்கள் வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

------------

                                                          சோளை


தேவையான பொருட்கள்:


ஏலக்காய்                      - 1
லவங்கம்                                          - 1
பட்டை                                               - 1
சின்ன வெங்காயம்                       - 3   
தக்காளி (நன்கு பழுத்தது)           - 2
வெள்ளை கொண்டைக்கடலை  - 1 கப்
இஞ்சி                                                      - 1 சிறிய துண்டு
பூண்டு                                                    - 8 பல்
புளி                                                          - எலுமிச்சை அளவு
வெல்லம்                                              - 1 தேக்கரண்டி
டால்டா                                                  - 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய்                                  - 2
மிளகாய்த்தூள்                                     - 1 தேக்கரண்டி
நெய் தாளிக்க
உப்பு தேவையான அளவு
நன்கு அரிந்த கொத்தமல்லித்தழை & அழகுபடுத்த

செய்முறை:

நன்கு ஊறிய கொண்டைக்கடலையை குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஏலம், லவங்கம், பட்டை எல்லாவற்றையும் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். தக்காளிகளை வெந்நீரில் போட்டு தோலை உரித்துத் தனியே அரைத்துக் கொள்ளவும். சூடான வாணலியில் நெய்யை விட்டு, நெய் இளகியவுடன் சிறிதளவு சீரகத்தைப் போடவும். சீரகம் வெடிக்கும் போது அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைக் கொட்டி நெய் தனியே பிரியும் வரை கிளறவும். பிறகு அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். உப்பு, மிளகாய்த்தூள், புளி, வெல்லம், வேகவைத்த கொண்டைக்கடலையை இதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இக்கலவை ஓரளவு கெட்டியானவுடன் அரிந்த கொத்தமல்லித்தழைகளையும், பச்சை மிளகாய்களையும் தூவி பரிமாறவும். தேவைப்பட்டால் இதனுடன் வெங்காயம் மற்றும் எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம்.

ஊட்டச்சத்து விவரங்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை புரதம் அதிகம் நிறைந்தது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.

--------------

                                                         கோதுமை பாயசம்

 
தேவையானப்பொருட்கள்:

ஏலக்காய்                 - 5
முழு கோதுமை      - 50 கிராம்
வறுகடலை              - 40 கிராம்
சர்க்கரை                  - 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை      - 15 கிராம்
முந்திரிப்பருப்பு                    - 5 கிராம்
உலர்ந்த திராட்சை              - 5 கிராம்

செய்முறை:

முழு கோதுமையை இதமான சூட்டில் பொன்னிறம் வரும் வரை வறுத்து, அத்துடன் வேர்க்கடலை மற்றும் வறுகடலையையும் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். பொடி செய்த கோதுமை, வேர்க்கடலை மற்றும் வறுகடலை மூன்றையும் சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும். வேகவைத்த கலவையுடன் சர்க்கரையைச் சேர்த்து, முந்திரிப்பருப்பு மற்றும் திராட்சை சேர்த்து இறக்கவும். சூடான கோதுமை பாயசம் தயார். சிறிய கிண்ணங்களில் ஊற்றி ஸ்பூன் போட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.

ஊட்டச்சத்து விவரங்கள்:

கோதுமை, வேர்க்கடலை, வறுகடலை ஆகியவை புரதச்சத்து நிறைந்தவை. உலர்ந்த திராட்சையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

----------

                                                       டூ இன் ஒன் பூரி


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு     - 2 கப்
பீட்ரூட்                     - 1 (சிறியது)
பசலைக்கீரை        - சிறிதளவு
நெய்                - 2 தேக்கரண்டி
உப்பு                - 1 தேக்கரண்டி   
எண்ணை & தேவையான அளவு

செய்முறை:

பீட்ரூட்டை தோல் சீவி இரண்டாக நறுக்கி குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். வெந்ததும் அதை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். பசலைக்கீரையையும் வேகவைத்துக் கொள்ளவும். கோதுமை மாவை சலித்து உப்பும், உருக்கிய நெய்யும் சேர்த்து பொலபொலவென உதிராமல் உறுதியாக இருக்குமாறு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சரிபாதியாக பிரித்துக் கொள்ளவும். அரைத்த பீட்ரூட்டை ஒருபாதி மாவுடன் சேர்த்துப் பிசையவும். வேகவைத்த கீரையை மற்றொரு பாதி மாவுடன் சேர்த்துப் பிசையவும். இரண்டு கலவைகளையும் தனித்தனி சிறு உருண்டைகளாக செய்து வட்டவடிவமாகத் தேய்க்கவும். இரண்டு கலவைகளிலும் இருந்து தலா ஒரு பூரியை எடுத்து ஒன்றின்மேல் ஒன்று வைத்து மறுபடியும் பூரிக்கட்டையால் தேய்க்கவும். இப்பொழுது இரண்டு நிறத்துடன் கூடிய பூரி தயார். இதை சூடாக்கிய எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

ஊட்டச்சத்து விவரங்கள்:

பீட்ரூட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் புற்று நோயில் இருந்து பாதுகாக்கும். பசலிக்கீரை, இரும்புச்சத்து நிறைந்தது.

---------

                                                           தர்பூசணி ஜூஸ்


தேவையான பொருட்கள்:

ஏலக்காய்    -  2
தர்பூசணி     - 2 துண்டு
சர்க்கரை     - 50 கிராம்

செய்முறை:

தர்பூசணியை விதையை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். துண்டுகளாக்கிய தர்பூசணியுடன் சர்க்கரையைச் சேர்த்து மிக்சியில் அடித்து ஜூஸாக்கிக் கொள்ளவும். இதனை சிறிது நேரம் குளிர்பதனப்பெட்டியில் வைத்து பின்னர் பரிமாறவும்.

ஊட்டச்சத்து விவரங்கள்:

தர்பூசணி இரும்புச்சத்து நிறைந்தது. இது வெயில் நேரத்தில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை அளிக்கிறது.

-----------

1 கருத்து:

  1. அத்தனையும் அருமையான குறிப்புகள்.
    இன்றைக்குப் பாயசம் இந்தமுறையில்தான்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு