முட்டையின்  முக்கியத்துவம்!



செலவு குறைந்த, அதேநேரம் உயர் தரமான புரதத்துக்கான அருமையான ஆதாரமாக முட்டை திகழ்கிறது. முட்டையை  ஊட்டச்சத்துகளின் உறைவிடம்Õ என்றே கூறலாம். முட்டையில் பூரிதக் கொழுப்பு குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளது. வைட்டமின் ஏ, பி, டி, ஈ போன்றவை நிறைந்துள்ளன. அதிகமாக முட்டை சாப்பிட்டால் நல்லதில்லை என்பது தவறான கருத்து.

* தினசரி ஒரு முட்டை சாப்பிட்டால், பார்வை பாதிப்புக்குக் காரணமான மாக்குலார் டீஜெனரேஷனையும், காட்டராக்டையும் தடுக்கும்.

* வைட்டமின் டி  உள்ள இயற்கையான ஒரே உணவுப் பொருள் முட்டை. வலுவான, ஆரோக்கியமான எலும்புகள், நகங்கள், முடிகள், பற்களுக்கு வைட்டமின் டி உதவுகிறது.

* தினசரி 2 முட்டைகள் சாப்பிடுவது, செல்களின் அத்தியாவசியக் கட்டமைப்புப் பொருளான லிபிடை மேமபடுத்தும்.

* ஒமேகா க்கான சிறந்த ஆதாரமாக முட்டை உள்ளது. அது ரத்த உறைவைத் தடுக்கிறது, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது, டிரைகிளிசரைடுகளையும், உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

* மார்பகப் புற்றுநோயையும் முட்டை தடுக்கக் கூடும். வாரம் 6 முட்டைகள் சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 44 சதவீதம் அளவுக்குக் குறைகிறது என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

                                                                  -----------------

                                                   ஆரோக்கியம் காக்கும் பூண்டு!



* பூண்டை அரைத்து, சருமத்தில் ஏற்படும் கட்டிகள் மீது பற்றுப் போல் போட்டால், கெட்டியாக உள்ள கட்டிகள் நாளடைவில் இளகிப் பழுத்து உடையும்.

* வெள்ளைப் பூண்டை அதே அளவு வெற்றிலை சேர்த்து நைய அரைத்து, இரவு படுக்கப் போகும்போது தேமல் உள்ள பகுதிகளில் பூசி, காலையில் குளித்தால் சில நாட்களில் தேமல் மறையும். மேலும் தோன்றாமலும் இருக்கும்.

* பெண்கள் பிரசவித்தவுடன், வேலிபருத்தி இலை, சுக்கு, பூண்டு, மிளகு ஆகிய ஒவ்வொன்றையும் 5 கிராம் அளவு எடுத்து இடித்து நீரில் போட்டு குடிநீர் போல ஆக்க வேண்டும். அதை மூன்று நாட்கள் பருகி வந்தால் கருப்பை அழுக்கு நீங்குவதுடன், சுருங்கவும் செய்யும்.

* சிலருக்குப் பித்தப் பையில் பித்தம் அதிகமாகி, குமட்டல், வாந்தி போன்றவை உண்டாகும். பூண்டுச் சாறு 15 மி.லி., இஞ்சிச் சாறு 15 மி.லி., தேன் 15 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு அடிக்கடி சுவைத்துக் குடித்தால் பித்த வாந்தி நிற்கும்.
* சில பூண்டுப் பற்களை அரைத்து வெந்நீரில் அல்லது பாலில் கலந்து குடித்தால் போதும். வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

* கிருமித் தொற்றால் தலையில் ஆங்காங்கே மொத்தமாக முடி கொட்டக் கூடும். அந்த இடங்களில், பூண்டை நன்றாகத் தேன் விட்டு அரைத்துத் தடவி வந்தால் நல்ல பலன் இருக்கும். முடியில் தேன் பட்டால் நரைக்கும் என்பது தவறானது.

                                                                       -----------------

                                               உடல் துன்பங்களைப் போக்கும் துளசி! 



ஆன்மிகத்துடன் தொடர்புடைய துளசி, மருத்துவக் குணம் நிறைந்த மூலிகை என்பது நாம் அறிந்ததே.

* துளசியில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி என்ற பல்வேறு வகைகள் உண்டு. எல்லாமே மருத்துவக் குணம் உடையவைதான். இலை, தண்டு, பூ, வேர் என்று இச்செடியின் அனைத்துப் பாகங்களும் பலன் தரும்.
தமிழகம் எல்லாம் தானாக வளர்ந்து கிடக்கும் துளசியின் தாயகம் இந்தியாதான். அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலும் இது காணப்படுகிறது.

*  துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகசக்திக் குறைவு, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியவற்றைக் கலந்தால் Ôதுளசிக் கஷாயம்Õ ஆகும். அந்த துளசிக் கஷாயத்தை சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்குத் தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி கொடுத்தால் நல்ல பலன் இருக்கும்.

* உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்துப் பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்குத் துளசிச் சாறு ஒரு சிறந்த நிவாரணி ஆகும்.
துளசி இலையை அப்படியே அவித்துப் பிழிந்து சாறு எடுத்து, காலை, மாலையில் 5 மி.லி. அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பசியை அதிகரிக்கும். இதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும்.

* மழைக் காலத்தில் துளசி இலையை தேந¦ர் போல காய்ச்சிக் குடித்து வந்தால் மலேரியா, விஷக் காய்ச்சல் போன்றவை ஏற்படாது. தொண்டைப் புண்ணால் அவதிப்படுபவர்கள் துளசி இலை கஷாயத்தைக் குடித்தால் புண் குணமாகும்.
வீட்டில் துளசி இலைக் கொத்துகளைக் கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

                                                                              -------------
                                                            தண்ணீரே மருந்து..!


                  உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண்ணீர். செலவே இல்லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவது தான் வேதனையான வேடிக்கை.
               சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் பெரும்பாலோர், தனியாரிடம் வாங்கி சாப்பிடும் Ôகேன் வாட்டர்Õதான் நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் மெட்ரோ தண்ணீரை குடித்தாலே போதும், முக்கியமாக காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது.
நாம் சாப்பிடும், குடிக்கும் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச்சாரங்களை வெளியேற்றி, சத்துக்களை, திரவ வடிவில் ஏற்று உடலின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான் கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர்கிறது.
உணவு சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
               என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன் படாது. உண்மையில், அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை. ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். 

                                     ---------------------

1 கருத்து:

  1. தேன், முடியின் மீது பட்டால் நரைத்துவிடும்
    என்பார்கள். அது தவறான கருத்து. முடியின் மீது தேன்
    படும்போது, முடியில் உள்ள மெலனின் நிறமியின்
    அளவு சற்றுக் குறைந்து லேசாக செம்பட்டை நிறத்தில்
    தோன்றும். ஆனால், வெளியில் செல்லும்போது சூரிய
    ஒளியில் உள்ள 'வைட்டமின் டி’ முடியின்
    மீது படுவதால், இரண்டு நாட்களிலேயே கேசம்
    இயல்பான கருப்பு நிறத்துக்கு மாறிவிடும்.
    அதேபோல வெந்நீரில் தேன் கலந்து காலையில் வெறும்
    வயிற்றில் குடித்தால், உடல் இளைக்கும் என்பார்கள்.
    இப்படிச் சாப்பிடுவதால், உடலில் உள்ள தேவையற்றக்
    கழிவுகள் வெளியேற்றப்படும். ஓரளவு உடல்
    எடை குறையும் வாய்ப்பும் உண்டு. வெந்நீரில் தேனுடன்
    சிறிதளவு இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் இன்னும்
    கூடுதல் பலன் கிடைக்கும்.
    ஆனால், ஒன்று முக்கியம்... நீங்கள் பயன்படுத்தும் தேன்
    சுத்தமானதாக இருந்தால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள்
    கிடைக்கும்!''

    பதிலளிநீக்கு