பொது அறிவு

*  இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு நகரில் உள்ள ஆஷ் மொழியன் அருங்காட்சியகம் 1638&ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுதான் உலகின் முதல் அருங்காட்சியகமாகும்.

*  மிகவும் பழமையான கலைக்களஞ்சியம், பிளினி என்ற ரோமானியரால் உருவாக்கப்பட்டது. இது மொத்தம் 37 தொகுதிகள் கொண்டது. 20 ஆயிரம் விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

*  உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழும் பெண்கள் உள்ள நாடு ஜப்பான். இங்குள்ள பெண்கள் சராசரியாக சுமார் 82 வயது வரை உயிர் வாழ்கிறார்கள்.

*  ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள மிக உயரமான சிகரத்தின் பெயர் எல்பர்ஸ். இதன் உயரம் சுமார் 5 ஆயிரத்து 642 மீட்டர்.

*  நீச்சல் மூலம் நாடுகளைக் கடக்கும் கால்வாய் நீச்சல் போட்டி, 1962 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக