நாட்டுக் காய்கறி பிரியாணி
தேவையானவை:
கத்தரிக்காய், அவரைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், உருளை போன்ற காய்கறிகள் (எல்லாம் சேர்த்து) ஒரு கிலோ
பட்டை - 2
லவங்கம் - 2
பிரிஞ்சி இலை - 2
பச்சை மிளகாய் - 8
பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ
வெங்காயம் - 400 கிராம்
தக்காளி - 400 கிராம்
இஞ்சி, பூண்டு (அரைத்தது) - 100 கிராம்
புதினா - ஒரு கட்டு
கொத்துமல்லி - ஒரு கட்டு
தயிர் - ஒரு கப்
தனியா தூள் - 2 குழிக்கரண்டி
செய்முறை:
* காய்கறிகள், தக்காளி, புதினா, கொத்துமல்லி போன்றவற்றை நறுக்குங்கள்.
* குக்கரில் எண்ணை விட்டு பட்டை, லவங்கம் இலை தாளித்து புதினா, மல்லி இலை, இஞ்சி, பூண்டு அரைத்ததையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
* அதிலேயே தக்காளி, வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போக நன்றாக வதக்குங்கள்.
* அத்துடன் பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறுங்கள்.
* அதன் பின்பு, அரிசி, மல்லித்தூள் சேர்த்துக் கிளறி விடுங்கள்.
* இப்போது தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* குக்கரில் இருந்து 3 விசில் சத்தம் வந்ததும் அடுப்பிலேயே 5 நிமிடங்கள் வைத்து இருந்து இறக்கி விடுங்கள். அவ்வளவு தான்...நாட்டுக் காய்கறி பிரியாணி ரெடி.
*****
சேமியா பிரியாணி
தேவையானவை:
பட்டை - 2
லவங்கம் - 2
பிரிஞ்சி இலை - 2
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 6
பெரிய வெங்காயம் - 6
சேமியா - ஒரு கிலோ
புதினா - ஒரு கட்டு
கொத்துமல்லி - ஒரு கட்டு
இஞ்சி, பூண்டு அரைத்தது - 100 கிராம்
தயிர் - ஒரு கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
தனியா தூள் - 4 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணை - 2 குழிக்கரண்டி
காய்கறிகள் (விருப்பத்திற்கேற்ப கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி போன்றவை) ஒரு கிலோ
செய்முறை:
* சேமியாவை சிறிது எண்ணை விட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.
* கடாயில் எண்ணை ஊற்றி, சூடேறிய பின் எல்லாப் பொருட்களையும் எடுத்து ஒவ்வொன்றாக வதக்குங்கள்.
* தயிர் சேர்த்து சேமியாவை கிளறுங்கள்.
* ஒரு டம்ளர் சேமியாவிற்கு ஒரு டம்ளர் வெந்நீர் என்ற விகிதத்தில் கலந்து நன்றாக கிளறுங்கள்.
(மறந்தும் கூட குளிர்ந்த நீரை ஊற்றி விடாதீர்கள்) இப்போது சேமியா பிரியாணி தயார்.
******
வாழைப்பூ வடை
தேவையானவை:
வாழைப்பூ - 1
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 3 பல்
மூக்குக் கடலை - 100 கிராம்
துவரம்பருப்பு - 300 கிராம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு தேக்கரண்டி
புதினா - 10 இலைகள்மோர்
எண்ணை போதுமான அளவு
உப்பு தேவைக்கேற்ப
அரைக்க வேண்டிய பொருட்கள்
மூக்குக்கடலை, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி, பூண்டு
செய்முறை:
* மோரில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சிறிது வாழைப்பூவை எடுத்து ஊற வைக்கவும்.
* வாழைப்பூவிலிருந்து நீக்க வேண்டிய பாகங்களை நீக்கி விட்டு நறுக்கிக் கொள்ளவும்.
* மோரில் மஞ்சள் பொடியை சேர்த்து அதில் நறுக்கிய வாழைப்பூவை சேர்க்கவும்.
* அரைக்க வேண்டிய பொருட்களை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அரைக்கவும்.
* மோரில் ஊற வைத்த வாழைப்பூவை பிழிந்து அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
* அத்துடன் புதினா இலைகளையும் சேர்க்கவும்.
* கடாயில் எண்ணையை ஊற்றி வடைகள் தயாரிக்கவும். சூடான வடைகளை தேங்காய் சட்னியுடன் சேர்த்துப் பரிமாறவும்.
******
செட்டி நாடு கீரை மசியல்
தேவையானவை:
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 6 பல்
பாசிப்பருப்பு (அல்லது) துவரம்பருப்பு - 100 கிராம்
சிறுகீரை - ஒரு கட்டு
சீரகம் - அரை தேக்கரண்டி
நெய் (அல்லது) எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
* பாசிப்பருப்பைக் குழையாமல் வேக வைக்கவும்.
* கீரையை சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொள்ளுங்கள்.
* நறுக்கிய கீரையை மிளகாய், பூண்டு, சீரகம், தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
* வேக வைத்த கீரை, பாசிப்பருப்பு இவற்றுடன் உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள்.
இப்போது தயாரான கீரை மசியலை, சூடான சாதத்தில் நெய் ஊற்றி கலந்து பரிமாறுங்கள்.
*****
பன்னீர் மக்கினி
தேவையானவை:
பச்சை மிளகாய் - 2
பன்னீர் - 250 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
கிரீம் - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
தக்காளி - 100 கிராம்
தயிர் - 100 மில்லி
எண்ணை - 50 மில்லி
வெண்ணை - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கொத்துமல்லி தழை தேவைக்கேற்ப, கரம் மசாலா பட்டை, லவங்கம், ஏலக்காய் தேவையான அளவு
செய்முறை:
* வெண்ணையை எண்ணையில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
* கரம்மாசலா பட்டை, லவங்கம், ஏலக்காய், அரைத்து வைத்த வெங்காயம் ஆகியவற்றை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
* பின்பு, அரைத்த முந்திரி பருப்பு, நறுக்கி வைத்த தக்காளி, தயிர், இவற்றை வெங்காயத்தோடு சேர்த்து வதக்கவும்.
* மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள் போட்டு வதக்கி சிறிதளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
* இப்போது பன்னீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
* அடுப்பிலிருந்து மசாலாவை இறக்கி, வெண்ணை மற்றும் கிரீமை சிறிதளவு ஊற்றவும்.
* கொத்துமல்லி தழை சிறிதளவு தூவி விட்டு, பரிமாறுங்கள்.
*******
கத்தரிக்காய் ஊறுகாய்
சாப்பாடு வகைகளுக்கு சுவை கூட்டுவதில் ஊறுகாய்க்கு தனி இடம் உண்டு. அதை சாப்பிட்டு பார்த்தவர்களுக்கே அதன் ருசி என்ன என்பது தெரியும். கத்தரிக்காய் ஊறுகாய் தயாரிக்க 1 கிலோ கத்தரிக்காய், கடுகு தூள் 50 கிராம், எண்ணை 4 மேஜைக்கரண்டி, வெல்லம் 1 மேஜைக்கரண்டி, மஞ்சள்தூள் 1 மேஜைக்கரண்டி, உப்பு, மிளகாய்த்தூள் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதலில் கத்தரிக்காய்களை சுத்தமாக்கிக்கொண்டு ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக வெட்டி, தேவையான நீர்விட்டு வேக வைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
பின்னர், கடுகுதூள், மிளகாய்தூள், வெல்லம், மஞ்சள்தூள், ஆகியவற்றை ஒன்றாக கலந்து எண்ணையில் தாளித்து வெந்த கத்தரிக்காய் துண்டுகளினுள் சரிசமமாக திணித்துவிட வேண்டும். பின்னர், சுத்தமான தனி பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். 4 நாளில் நன்கு ஊறிய பிறகு, கத்தரிக்காய் ஊறுகாயை ருசிக்கலாம்.
******
0 comments:
கருத்துரையிடுக