ஆரோக்கியத்திற்கு கீரையே கியாரண்டி!


கீரையின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்க முடியாது. பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. இதில் பலவகை இருந்தாலும், அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையின் மகத்துவ பலன்களை பார்ப்போம்,


* புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை  உணர்வு அதிகமாகும். வாய் சுவையற்று இருந்தால் மாறிவிடும். வாந்தி போன்ற குமட்டல் நிற்கும். நல்ல பசியும் உண்டாகும். ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாகும். வயிற்று பிரச்சினைகளும் தீரும்.

*
அரைக்கீரை என்று அழைக்கப்படும் அறுகீரை காய்ச்சல், ஜன்னி, கபம், வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் வாயுக் கோளாறுகளை உண்டாக்கும்.

* முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து, தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். ஆனால் புளி சேர்க்கக் கூடாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

*
கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறுக் கீரையை சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து விடும். குறிப்பாக கண் புகைச்சல் நீங்கி, பார்வை பிரகாசமாகும்.


* கொத்துமல்லிக் கீரை நல்ல வாசனையை உடையது. தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, குமட்டல் போன்றவை நிற்கும்.

* பசலைக் கீரையை, பசறைக் கீரை என்றும் சிலர் அழைப்பார்கள். இது அதிக சுவையை உடையது.  அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு, இந்த கீரையை கொடுத்தால் நாவறட்சியை தீர்க்கும்.

*
பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கு வெந்தயக் கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாகும். கபம் மற்றும் வாயுக் கோளாறுகள் விலகும். அடிக்கடி வரும் இருமல் நீங்கும். நாக்கில் ருசி இல்லாமல் இருந்தால் மாறி சுவையுணர்வு ஏற்படும். வயிற்றில் ஏற்படும் உப்புசம் போன்றவற்றை நீக்கும். வாதம் மற்றும் காச நோய்களுக்கு வெந்தயக்கீரை மிகவும் நல்லது.

* வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக் கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.

* புளிச்ச கீரை என்றழைக்கப்படும் புளிப்புக் கீரையை அடிக்கடி சாப்பிடுவோருக்கு வாத நோய்கள் நீங்கும். ரத்தத்தில் உள்ள உஷ்ணம் மற்றும் சிக்கல்கள் தீர்ந்து, சுத்தமாகும். கரப்பான் என்றழைக்கப்படும் நோய் அகன்று விடும். பித்தம் தொடர்பான நோய்களும் தீரும். நாக்கில் சுவையுணர்வை அதிகரிக்க வைக்கும். வயிற்றில் உள்ள கோளாறுகளை நீக்கும்.


*
காசினிக் கீரையை தினமும் சாப்பிடுவோருக்கு உடலுக்கு தேவையான தாதுக்கள் அதிகமாகும். உடம்பில் உள்ள உஷ்ணத்தை நீக்கும். மேலும் உஷ்ணம் தொடர்பான அனைத்து வியாதிகளையும் அகற்றும். உடம்பில் வீக்கம் இருந்தாலோ அல்லது கட்டி இருந்தாலோ குணமாகும்.

                                                         -----------------------------


                

1 கருத்து: