உயிரின் கண்டுபிடிப்பு



         காதலன், காதலியிடம், ‘நீதான் என் உயிர்‘ என்கிறான். மந்திரவாதி கதைகளிலோ ஏழுகடல், ஏழுமலை கடந்து சென்றால் கூண்டில் இருக்கும் கிளியின் உடம்பில் அரக்கனின் உயிர் இருப்பதாக சொல்லப்படுகிறது. உண்மையில் உயிர் அத்தனை எளிதானதா என்றால் அது இல்லை. என் உயிரே நீதான் என்று சொல்வது போல் உயிர் என்பது மற்றவர்கள் வைத்துக் கொள்ளும் பொருள் அல்ல. உயிர் தொட்டுப்பார்க்க கூடிய விஷயமும் அல்ல.
                சுவாசிப்பதும், இதயத்துடிப்பும் தான் உயிர் என்றால் அதெல்லாம் செயல்பாடு தானே தவிர உயிர் இல்லை. இதயமும், நுரையீரலும் கூட சுற்றும் பம்பரம் போல் தான். சுற்ற வைப்பது எது என்பது தான் கேள்வி. இது தான் உயிர் என்று யாரும் கண்டு சொல்லவில்லை.
                 இதயமும், நுரையீரலும் தான் உயிர் என்றால் கனடா நாட்டில் 230 பாரன்ஹீட் வெப்பத்தில் வெந்நீர் ஊற்றுகளில் வாழும் பாக்டீரியாக்களுக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் எதுவும் கிடையாது. கர்ணனுக்கு தொடையில் உயிர் இருப்பதாக சொல்லும் கதையை விஞ்ஞானம் துளி கூட நம்பவில்லை. உயிர் ஒன்றும் இந்த இடத்தில் தான் இருக்கிறது என்று சொல்லக்கூடிய பொருள் இல்லை. எனவே தான் அறிவியல், அது எங்கு இருக்கிறது என்று துருவித் துருவி தேடத் தொடங்கியது.
                 இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு உயிரின் ரகசியம் தான். உயிர் என்பது நமது உடலில் உள்ள செல்களில் தான் ஒளிந்து இருக்கிறது. உடலில் மொத்தம் 10 கோடி செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லின் மையத்தில் இருக்கும் உட்கரு என்று சொல்லக்கூடிய நியூக்ளியத்தில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இந்த குரோமோசோம்களில் டி.என்.ஏ. என்று சொல்லக்கூடிய ஆக்ஸ்ரிபோ நியூக்ளிக் அமிலம் என்ற ஏணி வடிவ பொருள் உள்ளது. இந்த முறுக்கப்பட்ட வடிவம் கொண்ட டி.என்.ஏ.வை விரிவுபடுத்தினால் 5 அடி நீளம் இருக்கும். இதுதான் நமது உயிரின் ஆதாரம். இதில் தான் ஜீன்கள் உள்ளன.
                  ஜீன்கள் தான் நாம் கருவாக உருவாகும் போது, நமது பெற்றோர்களின் உடல் அமைப்பு, குணங்கள், பரம்பரை நோய்கள் போன்றவற்றை கொண்டு வந்து சேர்க்கின்றன. நமது உயிரின் ரகசியமே ஜீன்களில் தான் உள்ளது என்பதை அறிவியல் கண்டுபிடித்து விட்டது. ஹியூமன் ஜீனோம் என்ற விதிப்படி மனிதன் மற்றும் ஜீவராசிகளின் ஜீன்களின் உள்ளே என்ன பதியப்பட்டிருக்கிறது என்பதை தனித்தனி வகையாக பிரித்து தேடிக் கொண்டு இருக்கிறது, விஞ்ஞானம். இன்னும் 50 ஆண்டுகளில் ஜீன்கள் பற்றிய விவரம் முழுவதும் மனிதன் கைக்கு வந்து விடும். ஆகவே உயிரின் ரகசியம் நமது செல்களில் உள்ள ஜீன்களில் தான் உள்ளது. கடந்த ஆயிரம் ஆண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இது தான்.
                                       ---------------------------------------

1 கருத்து: