
இலங்கையில் 16&ந் தேதி நடந்த 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டியில் நடந்த ஒரு முக்கிய சம்பவம் கிரிக்கெட் பார்வையாளர்களிடமும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி யது.
சர்வதேச அளவில் ஐ.நா.வையே ஏமாற்றி வரும் இலங்கை, அன்று நடந்த போட்டியில் சேவாக்கையும் (இந்திய ரசிகர்களையும்) ஏமாற்றிவிட்டது. சேவாக் அபாராமாக விளையாடி 99 ரன்கள் எடுத்தார். 1 ரன் எடுத்தால் சதம் எடுக்கும் நிலை என்று இருந்தது. அப்போது இலங்கை பந்து வீச்சாளர் ரந்தீவ் வீசிய பந்தில் அட்டகாசமாக 'சிக்சர்' அடித்தால் இந்தியா வெற்றியைப் பிடித்தது.
வெற்றியுடன், 'சிக்சர்'&ரும் சேர்த்து சதம் கண்ட மகிழ்ச்சியில் பெவிலியன் போகும் போது 'அம்பயர்' வடிவில் அதிர்ச்சி வந்தது அனைவருக்கும்.
வெற்றிக்கான கடைசி சிக்சர் 'நோ பாலாக' மாறியதால் சேவாக்கின் சதம்...(கதம்...கதம்).
விளையாட்டில் இது எல்லாம் சா¤ தான் என்ற பக்குவத்தில் சென்றுவிட்டார்கள் நமது வீரர்கள். ஆனால் இந்திய வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, சேவாக் சதம் போடக் கூடாது என்று இலங்கை வீரர்கள் நடத்திய மற்றொரு (சதி) விளையாட்டு, அதை ஒளிபரப்பி பார்க்கும் போது நன்றாக தெரிந்தது.
வேண்டுமேன்றே, அநாகரீகமாக பந்து வீசி சேவாக்கின் சதத்தை தடுத்தது தெரியவந்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கட்டணம் எழுந்தது. 'அறிமுக வீரர்களுக்கு இது அழகல்ல' என்று சேவாக்கும் விமர்சித்தார்.
'ஸ்டம்பு மைக்' வடிவில் நேற்று விழுந்தது, அடுத்த ஒரு பெரும் குண்டு.
கடைசி பந்தை ரந்தீவ் போடப்போகும் போது, அவருக்கு அறிவுரை வழங்கியவர் அனுபவ வீரர் (!) தில்சான். தில்சான், ரந்தீவிடம் சிங்கள் மொழியில் பேசியது 'ஸ்டம் மைக்' மூலம் தெரியவந்தது.
இவர்களின் இந்த கீழ்தரமான சிந்தனை மூலம் விளையாட்டிலும் தெரிந்துவிட்டது, அவர்களின் உண்மையான முகம்.
இப்போவாவது தெரிஞ்சுக்கோங்க....
'ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்'.

0 comments:
கருத்துரையிடுக