நவக்கிரக விநாயகர்:
ஓம்கார நாயகனாய் திகழும் பிள்ளையாரின் உடலில் நவக்கிரகங்களும் உறைகின்றனராம். அவரது
நெற்றியில் - சூரியனும்
நாபியில் - சந்திரனும்
வலது தொடையில் - செவ்வாய் பகவானும்
வலது கீழ் கையில் - செவ்வாய் பகவானும்
வலது மேல் கையில் - சனியும்
சிரசில் - குரு பகவானும்
இடது கீழ் கையில் - சுக்கிரனும்
இடது மேல் கையில் - ராகுவும்
இடது தொடையில் - கேதுவும் இருப்பதாக ஐதீகம்.
ஒம் நவக்கிரக விநாயகரை கும்பகோணம் மடத்துத் தெரு ஸ்ரீ பகவத் பிள்ளையார் கோவிலில் காணலாம். மிக அபூர்வமான படம். இங்கு மட்டுமே காணப்படுகிறது.
பிள்ளையார் தரும் பலன்கள்:
விநாயகப் பெருமானை எப்படி வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் எனத் தெரிந்து கொள்வோம்.
* மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் நற்பதவி கிடைக்கும்.
* புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்க லாபம் கிட்டும்.
* உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர்.
* கல்லால் அமைந்த விநாயகரை வழிபட சகல பாக்கியங்களும் பெறலாம்.
* மாவால் செய்த விநாயகரை வழிபட்டால் வெற்றி கிட்டும்.
* வெள்ளெருக்கால் செய்த பிள்ளையாகரை வழிபட செல்வம் கிட்டும்.
* மஞ்சள் தூளினால் பிள்ளையார் செய்து வழிபட சகல காரியங்களும் நல்லபடி நடக்கும்.
* வெல்லத்தினால் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால் வாழ்வு வளம் பெறும்.
* பசுஞ்சாணியினால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை வழிபட பிணிகள் நீங்கி வளம் பிறக்கும்.
மதுரை முக்குறுணிப் பிள்ளையார்:
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இந்த முக்குறுணிப் பிள்ளையார் அருள் பாலித்து வருகின்றார். இந்த முக்குறுணிப் பிள்ளையாருக்கு விநாயகச் சதுர்த்தி நாளில் 18 படி பச்சை அரிசியைக் கொண்டு ஒரே மோதகம் தயாரித்து பூஜை செய்வது குறிப்பிடத்தக்கது. உருவத்தில் பெரிய இந்த பிள்ளையார் அடியார்களுக்கு அருள்வதிலும் பெரியவர் என்பது இவரது தனிச்சிறப்பு.
பலன் தரும் பிள்ளையார் அர்ச்சனை:
பலன்கள் அர்ச்சனை இலைகள்
1. தர்ம சிந்தனை வளர - முல்லை இலை
2. துயரங்கள் நீங்க - அகத்திக் கீரை
3. பொருள் பெற - கரிசலாங்கண்ணி இலை
4. பில்லி சூன்யம் நீங்க - தாழை இலை
5. இன்பம் பெற - விஸ்வ இலை
6. ஞானம் பெற - ஜாதி மல்லி இலை
7. சௌபாக்கிய வாழ்விற்கு - வெள்ளறுகம்புல்
8. வாக்கு வன்மை பெற - அரச இலை
9. கல்வியில் மேன்மைக்கு - இலந்தை இலை
10. தீய சக்திகளை அகற்ற - மருவு இலை
0 comments:
கருத்துரையிடுக