தத்துவம்

1.செயலை விதையுங்கள், பழக்கங்கள் உருவாகும்.
பழக்கத்தை விதையுங்கள், குணம் உருவாகும்.
குணத்தை விதையுங்கள், எதிர்காலம் உருவாகும்.

2.எப்போதும் மவுனமாக இரு; அனைத்தும் தெரிந்தும், அமைதியாக இருக்கும் நூலகம் போல.

3.மனம் கடல் போன்றது; பகுத்தறிவு கூரிய கத்தி போன்றது.

4..நல்லவனாக இருப்பவன் தனியாகத்தான் இருக்க வேண்டும்.

5.துக்கத்துக்கு ஒரே மருந்து தீவிரமாக வேலை செய்வது தான்.

6.கொடுக்கக்கூடியவனுக்கு தான் அதிக நண்பர்கள் இருப்பார்கள்.

7.நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால், உன்னுடைய பலவீனங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

8.புகழத் தெரியாதவனுக்கு பேசவே தெரியாது .

9.எல்லோரையும் விரும்பு, சிலரை மட்டும் நம்பு, ஒருவரை பின்பற்று, அனைவரிடம் இருந்தும் கற்று கொள்.

10.தண்ணீரில் விழையும் உப்பு, தண்ணீரிலேயே கரைகிறது.

0 comments:

கருத்துரையிடுக