அண்மையில் இணையத்தில் உலா வந்த போது பார்த்த ஒரு தளத்தின் மீது நான் தீராத ஆசை கொள்ளும் அளவிற்கு அது என்னைக் கவர்ந்தது. கம்ப்யூட்டர் மலருக்கான பல டிப்ஸ்களை மட்டுமின்றி, பல பயனுள்ள தகவல்களையும் அது தந்தது. மேலும் நம்மை உற்சாகப்படுத்த கேம்ஸ்கள் பலவற்றையும் அது கொண்டுள்ளது. இந்த தளத்தின் முகவரி: http://www.safesurfer.org/ இந்த தளம் பல பிரிவுகளைக் கொண்டு அழகாக நம்மைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்றவுடன் தளம் அமையும் விதம் பாராட்டத்தக்கதாய் அமைகிறது. இதன் பிரிவுகளைப் பார்க்கலாம்.
Forum: இதில் இந்த தளத்தைக் காண வருபவர்கள் கூறும் கருத்துக்களைப் படிக்கலாம். நீங்களும் உங்கள் கருத்தை எழுத வேண்டும் என எண்ணினால், இதில் பதிந்து கொள்ள வேண்டும். அதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்பதால், இந்த தளம் வரும் அனைவரும் இதில் தங்களைப் பதிந்து கொள்வார்கள்.
Blog: நாம் சில கருத்துக்களை பைசாவுக்கு புண்ணியம் இல்லாதது என்று வேடிக்கையாகவும் (சில வேளைகளில் சீரியசாகவும்) கூறுவோம் அல்லவா! அது போல்தான் இதுவும். இங்கு நீங்களும் உங்களைப் பதிந்து கொண்டு எழுதலாம். டிப்ஸ், ட்ரிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் குறித்த தலைப்புகளில் தகவல்கள் ஆகியவற்றைத் தரலாம்.
Lingo: இன்டர்நெட் குறித்த ஸ்லாங் என்னும் வழக்குச் சொற்கள் மற்றும் சுருக்குச் சொற்களைக் காணலாம். மேலே உள்ள ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் உள்ள எழுத்து ஒன்றில் அழுத்தினால், அந்த எழுத்தில் தொடங்கும் சொற்கள் குறித்த விளக்கங்கள் கிடைக்கும்; அல்லது ஸ்குரோல் செய்து கீழாக இதன்பக்கங்களைக் காணலாம்.
Tips’n’Trix: நான் அதிகம் விரும்பும் பிரிவு. கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் குறித்த பல டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ் இந்தப் பிரிவில் தரப்படுகிறது. அது மட்டுமின்றி நீங்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் என்று ஒரு பட்டியல் காட்டப்படுகிறது.
மேற்கண்ட பிரிவுகளுடன் இன்னும் சில பயனுள்ள பிரிவுகள் உள்ளன. அவற்றை நீங்களே இந்த தளம் சென்று அறிந்து கொள்ளலாம்.
The Buzz : இந்தப் பிரிவில் நாம் ஆர்வம் கொண்டுள்ள பல தலைப்புகளில் அண்மைக் காலத்திய செய்திகளையும் தகவல்களையும் படிக்கலாம். ஸ்போர்ட்ஸ், சயின்ஸ், உடல்நலம், தொழில் நுட்பம் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கின்றன.
----------------------------
ஆன்லைன் வீடியோ வகுப்பறைகள்
கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா? உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப் படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது. அறிவியல் பாடங்கள் அனைத்தும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ், பயாலஜி, மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், இஞ்சினியரிங், அக்கவுண்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட், பல் வைத்தியம், நர்சிங், சைக்காலஜி, ஹிஸ்டரி, மொழிப் பாடம் என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.
பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன.
மெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. யு.எஸ்.எம்.எல்.இ., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.
அனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது
உருவாக்கப் பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக்கரம் நீட்டுகிறது. இதன் முகவரி : http://www.learnerstv.com/.
-------------------------
வீடியோ கட்டர்
வீடியோ காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அல்லது திரைப்படங்களை ரசிக்கையில், சில காட்சிகளை மட்டும் தனியே ஒரு பைலாக எடுத்து வைத்தால் நல்லது என்று எண்ணுவோம். குறிப்பாக ஒரு நடனக் காட்சி அல்லது காமெடி நம்மைக் கவரலாம். அப்போது எப்படி ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ள காட்சியை மட்டும் தனியே பிரித்து பைலாகக் கொள்வது என்ற பிரச்சினை உங்களுக்கு ஏற்படும். இந்த பிரச்சினயைத் தீர்க்க வீடியோ கட்டர் http://www.freevideocutter.com/ என்ற புரோகிராம் இலவசமாக என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது.
இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்த பின் புரோகிராமினை இயக்கவும். பின் "Open Video" என்ற கட்டளையைக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் வீடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும். இந்த புரோகிராம் அந்த வீடியோவின் பார்மட், பிட் ரேட், பிளே ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைப் படித்தறிந்து, வீடியோ தம்ப்நெயில் படங்களை ஸ்லைடுகளாக உருவாக்கும். ட்ரேக் பாரில் இடது பக்கம் எந்த ஸ்லைடிலிருந்து கட் செய்திட வேண்டும் என்பதனைக் குறிக்கவும். வலது பக்கம் முடிந்திடும் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் செய்திட விரும்பும் பார்மட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் வீடியோ கட்டளை கொடுக்கவும். MPEG4, DivX, MP3, FLV, WMV என்ற பார்மட்கள் அனைத்தையும் இது கையாள்கிறது. நீங்கள் பதிய விரும்பும் பார்மட்டினையும் இதில் முடிவு செய்திடலாம். பின் நீங்கள் குறிப்பிடும் பைல் பெயரில், தேர்ந்தெடுத்த பார்மட்டில் வெட்டப்பட்ட வீடியோ காட்சி பைலாகக் கிடைக்கும். ஆடியோ மட்டும் வேண்டும் என்றாலும், அதனை எம்பி3 பைலாக சேவ் செய்திடலாம்.
---------------
0 comments:
கருத்துரையிடுக