பராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்

முன்பு ஒரு கம்ப்யூட்டர் மலரில், பிளாஷ் டிரைவ் குறித்து எழுதுகையில் கம்ப்யூட்டரைப் பராமரிக்க பல புரோகிராம்கள் வந்துள்ளன. இவற்றை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்து எங்கும் எடுத்துச் சென்று, எந்தக் கம்ப்யூட்டர் பிரச்னைக்கும் தீர்வு காணலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். பல வாசகர்கள் தொடர்ந்து அது எப்படி சாத்தியம், அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு கடிதங்கள் அனுப்பி உள்ளனர். ஊட்டி அருகே உள்ள வாசகர் ஒருவர் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அடிக்கடி கம்ப்யூட்டர் பிரச்னைகளுக்குத் தன்னை அழைப்பதாகவும், அதற்கு இந்த பிளாஷ் டிரைவ் மிகவும் உதவியாக இருக்குமே என்று கேட்டு, வழிகளைக் கேட்டுள்ளார்.

கம்ப்யூட்டர் பிரச்னைகளைத் தீர்க்கும் போர்ட்டபிள் புரோகிராம்களை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்றால் அதுவே பராமரிக்கும் பிளாஷ் டிரைவாக மாறிவிடும். இங்கே போர்ட்டபிள் புரோகிராம் என்பது இயக்கக் கூடிய புரோகிராம்களாகும். இவற்றை இயக்க இன்னொரு கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. அதனால் தான் இவற்றை பிளாஷ் டிரைவில் புரோகிராம்களாகவே பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம் என்று எழுதப்பட்டது. இவை பெரும்பாலும் தனி நபர் பயன்படுத்தும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் சில பிரச்னைகளுக்குத்தான் தீர்வுகளைத் தரும். அத்தகைய புரோகிராம்களை இங்கு காணலாம்.

1. சிகிளீனர் (Cleaner) சிகிளீனர் புரோகிராமி னைப் பலரும் தங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, தேவைப்படாத பைல்களைக் கம்ப்யூட்டரை விட்டு நீக்குவதற்குப் பயன்படுத்துகின்றனர். பிளாஷ் டிரைவில் இருந்தவாறு பயன்படுத்த, இதன் போர்ட்டபிள் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதனை இலவசமாகப் பெற http://www.piriform.com /ccleaner/download/portable  என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும். இந்த புரோகிராம் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் உள்ள உடைந்த வரிகளை நீக்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள் வைத்திருக்கும், நம்மைப் பற்றிய பெர்சனல் தகவல்களை எடுக்கிறது. குக்கீஸ், கேஷ் மெமரியில் பதிவாகும் விஷயங்களை நீக்குகிறது. செக்டிஸ்க் பைல் துண்டுகளைக் கண்டறிந்து வெளியேற்றுகிறது. ரெஸ்டோர் பாய்ண்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை பராமரித்துத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்கிறது.

2. ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller):  இந்த புரோகிராம் குறித்து ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் எழுதப்பட்டுள்ளது. இதனை பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்து புரோகிராம்களை எளிதாக அன் இன்ஸ்டால் செய்திட முடியும். ஏற்கனவே அன் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களின் நீக்கப்படாத விஷயங்கள் இருந்தால், அவற்றை அழகாக எடுத்தெறிகிறது. போர்ட்டபிள் பதிப்பு  http://www.revouninstaller.com/ revouninstaller.zip  என்ற முகவரியில் கிடைக்கிறது. அதனை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதியவும்.

3.ஈஸி கிளீனர் (Easy Cleaner)
இது சிகிளீனர் மேற்கொள்ளும் பல வேலைகளையும் செய்கிறது. அது செய்யாத ஒரு அருமையான பணியை மேற்கொள்கிறது. அதிகமாக ஓவர்லோட் ஆகிவிட்ட ஹார்ட் டிரைவினைச் சரி செய்கிறது. டிரைவ் மற்றும் தேர்ந்தெடுத்த போல்டர் மற்றும் சப்போல்டர்களின் பயன்படுத்தப்பட்ட அளவினைப் படம் போட்டு காட்டி பணியாற்றுகிறது. இதனையும் பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். இதனை http://personal.inet.fi/business /toniarts/ecleane.htm  என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

4. சூப்பர்ஆண்ட்டி ஸ்பைவேர் ஆன்லைன் சேப் ஸ்கேன் (Super Anti Spyware Online Safe Scan) : மால்வேர் எனப்படும் ஸ்பை வேலை மேற்கொள்ளும் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் போர்ட்டபிள் புரோகிராம்களைப் பல மாதங்கள் தேடிய பின் இது இருப்பது தெரிந்தது. மிகச் சிறப்பாக இது வேலை செய்கிறது. டாஸ் புரோகிராம் போல இது செயல்படுகிறது. இதனை இயக்கியவுடன் விண்டோ இன்டர்பேஸ் ஒன்று தந்து நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, ஸ்பை வேர்களைக் கண்டறிகிறது. இதன் சிறப்பு இந்த புரோகிராம் அடிக்கடி அப்டேட் செய்யப்படுவதுதான். இதனை http://www.superantispyware. com/onlinescan.html  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, அப்படியே பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம்.

5. ஹைஜாக் திஸ் (HijackThis) : ட்ரென்ட் மைக்ரோ நிறுவனம் தரும் புரோகிராம். இது எந்த மால்வேர் புரோகிராமினையும் பிக்ஸ் செய்வதில்லை. ஆனால் கண்டவுடன் நமக்கு ஒரு ரிப்போர்ட் தருகிறது. இதனை நாம் படித்து அறிந்து கொள்ள முடியாது. அப்படியே இந்த தளம் தரும் ஆன்லைன் அமைப்புகளில் பேஸ்ட் செய்தால், மால்வேர்களை நீக்கும் வழிகள் கிடைக்கும். http://hjtdata.trendmicro.com/hjt/analyzethis/index.php என்ற தளத்தில் இது கிடைக்கிறது.

6. ரெகுவா Recuva) ): இந்த புரோகிராம் குறித்து கம்ப்யூட்டர் மலரில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. இதன் போர்ட்டபிள் புரோகிராம் http://www.piriform. com/recuva/download/portable  என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இது பிளாஷ் டிரைவில் இருப்பது மிக அவசியம். அறியாமல் அழித்த பைல்களை நீக்கும் பணியை இதன் மூலம் அழகாக மேற்கொள்ளலாம். சிகிளீனர் தயாரித்து வழங்கும் நிறுவனமே இதனையும் தயாரித்து வழங்குகிறது.

---------------------

பி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்

டாகுமெண்ட் பார்மட்களில், பயன்பாட்டில் நமக்கு அதிகம் உதவுவது பி.டி.எப். (PDFP ortable Document Format) பார்மட் ஆகும். இதனை உருவாக்க அடோப் சாப்ட்வேர் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க அடோப் ரீடர் இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. பைல்களை (எக்ஸெல், வேர்ட், பி.பி.டி., போன்றவற்றை) பி.டி.எப். பைலாக மாற்ற வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் பி.டி.எப். பைல்களை உருவாக்கவும், உருவாக்கிய பைல்களைப் பிரித்து வைக்கவும், பகுதி பகுதியாக அவற்றை அமைக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்கவும் இணையத்தில் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

1. பி.டி.எப். மேக்கர் (PDF Maker from http://www.pdfmaker.biz/): ஒரே கீ கிளிக்கில் பி.டி.எப். பைலாக மாற்றும் திறன் கொண்டது இந்த சாப்ட்வேர். எந்த டெக்ஸ்ட் எடிட்டரிலும் டாகுமெண்ட் ஒன்றை தயாரித்துவிட்டு, இந்த தளம் சென்று டவுண்லோட் பட்டனில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் லோக்கல் டிரைவில், பைலுக்கான பி.டி.எப். டாகுமெண்ட் கிடைக்கும். எந்த பைல் வகையாக இருந்தாலும் பி.டி.எப். டாகுமெண்ட்டை இந்த தளம் தரும். அத்துடன் இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். புதிய டெக்ஸ்ட்டை இணைக்கலாம். பி.டி.எப். ஆன பின்னும் டெக்ஸ்ட்டில் அடிக்கோடிடலாம்; போல்ட் செய்திடலாம்; புதிய படங்களைச் சேர்க்கலாம்; ஏற்கனவே இருக்கிற கிராபிக்ஸ் ஆப்ஜெக்டை நீக்கலாம். பி.டி.எப். ஆன பக்கங்களை சுருக்கலாம், நகர்த்தலாம், ஒன்றுடன் ஒன்றை இணைக்கலாம். என்கிரிப்ட் மற்றும் டி கிரிப்ட் செய்திடலாம்.

2. பி.டி.எப் – டு – வேர்ட் (PDF 2 Word from) http://www.pdfonline.com/pdf2word /index.asp): எந்தவிதமான சிக்கலும் இன்றி பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலை மீண்டும் வேர்ட் டாகுமெண்ட்டாக மாற்றலாம். எந்த புரோகிராமினையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இந்த தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் பிரவுஸ் செய்து,பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால், அது வேர்ட் பைலாக மாற்றம் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். இது போல மேலும் ஆறு புரோகிராம் களைப் பயன்படுத்திப் பார்த்ததில், இதுதான் மிகச் சிறந்ததாகவும், வேகமாகவும் செயல்படும் புரோகிராமாகத் தெரிகிறது. பி.டி.எப்.பைல்களை வேர்டுக்கு மாற்றம் செய்து, பின் அவற்றை எடிட் செய்து, பின் மீண்டும் பி.டி.எப். ஆக மாற்றம் செய்திட விரும்புவோருக்கு இது மிகவும் பயன்படும்.

----------------------

0 comments:

கருத்துரையிடுக